Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிளிநொச்சி நகரில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானோர் படங்குகளால் அமைக்கப்பட்ட கூடாரங்களிலும், தகரங்களால் நிறுவப்பட்ட கொட்டில்களிலும் தங்கியிருக்கும் அவலம் நிலவுகின்றது.

வன்னிப் போரின் பொழுது கிளிநொச்சி நகரை ஆக்கிரமித்த சிங்களப் படையினர், மக்களின் வீடுகளை உடைத்து, வீட்டு நிலைகள், கதவுகள், சாளரங்கள், சுவர் கற்கள் போன்றவற்றைப் பயன்படுத்தித் தமது காவலரண்களையும், தடையரண்களையும் அமைத்திருப்பதோடு, பொதுக் கட்டிடங்களை தமது முகாம்களாக மாற்றியமைத்துள்ளனர்.

கிளிநொச்சி நகரில் பொதுமக்களை விட அதிக அளவில் சிங்களப் படையினர் நடமாடுவதோடு, கிளிநொச்சியின் தென்புலத்தில் உள்ள முறிகண்டிப் பகுதியில் காணப்படும் மக்களின் காணிகள் படையினரால் கபளீகரம் செய்யப்பட்டு பாரிய படைத்தளம் அமைக்கப்பட்டு வருகின்றது.

இதனை விட கிளிநொச்சி நகர்ப் பகுதியில் உள்ள பெரும்பாலான உணவகங்கள் சிங்களப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன.

இதனிடையே, மீளக்குடியமரும் மக்களை சந்திக்கச் செல்வோர் சிங்களப் படைப் புலனாய்வாளர்களால் கடுமையான கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவதோடு, மக்களின் வீடுகளுக்கு அடிக்கடி நேரில் செல்லும் படைப் புலனாய்வாளர்கள், குடியிருப்பாளர்களையும், அவர்களின் விருந்தாளிகளையும் விசாரணைகளுக்கும் உட்படுத்தி வருகின்றனர்.

0 Responses to கிளிநொச்சியில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் கூடாரங்களில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com