Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அதிபருக்கு பகவத் கீதை புத்தகத்தைப் பரிசளித்தார்.

5 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மோடிக்கு நேற்று மூன்றாவது நாள் ஆகும். வாஷிங்டனில் நேற்று இரவு மோடிக்கு ஒபாமா இரவு உணவு விருந்தளித்தார். அப்போது மோடியை ஒபாமா குஜராத் மொழியில் பேசி வரவேற்பு அளித்து, நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது. மேலும், ஒபமாவுக்கு மோடி இந்து மதத்தின் புனித நூலான பகவத் கீதையை பரிசாக அளித்தார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், மோடி தசரா நோன்பில் இருந்ததால், வெறும் பழச்சாறு மட்டுமே அருந்தியதாகத் தெரிய வருகிறது.

மேலும், சந்திப்பின்போது பெண்களுக்கு நாட்டில் உயர் பதவி அளிப்பது, பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வது, தீவிரவாதத்தை இரு நாடுகளும் சேர்ந்து ஒடுக்குவது, பருவகால மாற்றத்துக்கு எதிராக இணைந்து இந்தியா அமெரிக்கா போராடுவதுக் குறித்தெல்லாம் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. மோடிக்கு இன்று மதியம் அந்நாட்டு ராணுவ தளபதி விருந்து அளிக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to வெள்ளை மாளிகையில் ஒபாமாவுக்கு பகவத் கீதை பரிசளித்தார் மோடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com