Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாரென்று நினைத்தாய் தமிழனை(சீமானை)?...

பதிந்தவர்: தம்பியன் 08 August 2010

அடிப்பட்டே மாண்டிடும்
கோழையா?
உணர்ச்சியற்ற முடவனா?
ஒளியற்று உதிரும்
சூரியனா?
யாரென்று நினைத்தாய்
தமிழனை?...
வீரம் செறிந்த இனம்
மானம் போற்றும் சினம்
வாரி வழங்கும் மனம்
நாங்களின்று பிணம்...
பிணத்தையும் நக்கும்
சிங்கள ஆதிக்கம்!
யாரென்று நினைத்தாய்
சீமானை?...

தமிழுணர்ச்சியின் சீற்றம்
பாய்ந்திடும்
புலியின் தோற்றம்
உணர்ச்சியற்ற மறவர்களிடையே
உணர்ச்சி வசப்படும்
புலித்தமிழன்!...
எம்மை இனி தொட்டால்
பிணமாவாய்...
கடலோரம் சுட்டால்
சிங்களநாயே நீ
புலிக்கு இரையாவாய் ...
அடையாளம் இழந்தே
நீ சாவாய்...
யாரென்று நினைத்தாய்
சீமானை?...

சீமான் மீது
தேசிய பாதுகாப்பு சட்டம்!
ராசபக்சேவோடு
தேசிய பாதுகாப்பு ஒப்பந்தம்!!
மெய்க்கு சட்டம்
ஏற்றும் குற்றம்!
பொய்மைக்கு தேசியவாதி
பட்டம்!!
கொடையாளி காங்கிரசுக்காரன்
கொலையாளி பௌத்தன்
உளவாளி கருணா(க்கள்)
பகையாளி தமிழன்
இந்தியாவுக்கு பங்காளி
சிங்களன்...
எதிராளி தமிழன்
இந்திய குடிமகனாம்...
யாரென்று நினைத்தாய்
தமிழனை?...

திமிறி எழும் தமிழர் படை
நடுங்கி சாகும்
எதிரியர் படை...
தமிழீழம் தமிழீழமே
தமிழர்க்கு விடை!
உற்ற எம்உரிமையினை
தடுக்கும் எத்தடையும்
பிரபாகரன் படைமுன்
சாயும்...
புலிப்படை சாதிக்கும்...

மகா.தமிழ் பிரபாகரன்

**************************************************

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to யாரென்று நினைத்தாய் தமிழனை(சீமானை)?...

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com