யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்களின் காணிகளில் 201.3 ஏக்கர் காணிகள் நேற்று சனிக்கிழமை உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையிலுள்ள பிரதேசத்தில் காணி கையளிப்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மக்களிடம் காணிகளை மீளக்கையளித்துள்ளனர்.
வல்லை- தெல்லிப்பழை, அராலி வீதியை அண்மித்த 126.18 ஏக்கர் காணிகளும், காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை அண்மித்த 63 ஏக்கர் காணிகளும், தெல்லிப்பளை 18வது சிங்கரெஜிமென்ட் படைமுகாமை அண்மித்த 12 ஏக்கர் காணிகளுமாக மொத்தமாக 201.3 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், வறுத்தலை விளான் பகுதியில் முன்னர் படைமுகாம் அமைக்கப்பட்டிருந்த 12 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிக்கப்பட்டது. கையளிக்கப்பட்ட காணிகளில் இன்று காலை 09.00 மணியிலிருந்து மக்கள் சென்று துப்பரவு பணிகளை மேற்கொள்ள முடியும் எனவும் கிராமசேவகர் ஊடாக காணி எல்லைகள் தொடர்பில் உறுதிப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to யாழில் உயர் பாதுகாப்பு வலயத்திலிருக்கும் காணிகளில் 201 ஏக்கர் பொதுமக்களிடம் மீளக் கையளிப்பு!