Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போரின் கெடு பிடிகளிலிருந்து தப்பித்து சுகந்திரக் காற்றை சுவாசிக்க மேற்கத்திய நாட்டை நோக்கி பயணித்தோம் ஆனால் துன்பம் எங்களை விடுவதாய் இல்லை என்று கூறினர். துரதிருஷ்டவசமாக மலேசிய எல்லையில் சிக்கி 110 நாட்கள் பாதுகாப்பு முகாமில் அடைக்கப்பட்டு தற்போது விடுதலையாகியிருக்கிறோம் மேற்கத்திய நாட்டை நோக்கிய எங்களது பயணம் தடைப்பட்டு விட்டது கையில் பணம் இல்லாமல் மடியில் கனத்தை மட்டும் சுமந்து தனி மரமாய் நிற்கின்ற எங்களை வாழ வையுங்கள் இல்லையேல் மடிந்து போவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று கண்களில் கண்ணீர் இழையோட கூறுகிறார்கள்.

மாற்று செயலணித் தலைவர் கலைவாணர் முயற்சியால் பாதுகாப்பு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 62 ஈழ அகதிகளும் தங்கள் வாழ்க்கையின் திசை தெரியாது விழி பிதுங்கிய நிலையில் முடங்கிக் கிடக்கிறார்கள் தங்களது சொந்த பந்தங்களை சிங்கள இராணுவத்தின் துப்பாக்கி தோட்டாக்களுக்கும் கையெறி குண்டுகளுக்கும் பலிகொடுத்து விட்டு இரணங்களுடன் எஞ்சிய நாட்களை கழித்துக் கொண்டிருக்கின்ற ஈழ அகதிகளை சந்திக்க வாய்புக் கிடைத்தது

தமிழர் செய்திச் சேவைக்கு ஜெயகுமார் சுபத்ரா வழங்கிய நேர்காணலின் சில துளிகள் -

நம் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தப்பி விடு நம் மக்களுக்காக நான் இறுதி வரை போராடுவேன் இது தான் என் அன்புக் கணவரிடமிருந்து வந்த இறுதி வார்த்தைகள் சிங்கள இராணுவத்தின் கெடுபிடிகளிலிருந்து தப்பித்து கப்பலில் ஏறினோம். என் கணவர் மட்டும் வரவில்லை அவர் என்ன ஆனார் எங்கு இருக்கிறார் என்று இதுவரையும் எனக்குத் தெரியவில்லை. மூன்று பிள்ளைகளை வைத்துக் கொண்டு செய்வதறியாது நிற்கின்றேன் ஜயோ ..கடவுளே என் கணவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் நேர்ந்திருக்கக் கூடாது என்று ஜெயகுமார் சுபத்ரா கண்ணீர் மல்க கூறினார்.

சிங்கள இராணுவத்தின் அட்டூழியங்கள் எங்கள் உடலில் வடக்களாக இன்னமும் இருக்கின்றன என கூறிக் கொண்டே தமது தொடைப் பகுதியை அவர் காட்டினார் அழமான காயம் அழியா வடுக்களாக இருந்தன

மலேசிய பாதுகாப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட போது ஜந்து நாட்களுக்கு நான் சாப்பிடவில்லை. வாழ்கின்ற நாட்களிலேயே நரகம் எவ்வளவு கொடூரமானது என்பதை உணர்ந்து கொண்டேன் இறுதிக் கட்ட போரின் போது சிங்கள இராணுவத்தினரின் அராஜகம் தலைவிரித்தாடியது. வழியில் காண்கின்ற தமிழர்களை எல்லாம் சுட்டுக் கொன்றனர் எனது முதுகுப் பகுதியிலும் இலங்கை இராணுவத்தினரின் துப்பாக்கி தோட்டா பாய்ந்திருக்கிறது. அதனை இன்னும் வெளியே எடுக்கவில்லை. கையெறி குண்டு பட்டு வலது கையிலும் மகிப் பெரிய வடு இருக்கிறது என்று தழுதழுத்த குரலோடு பேசிய 19 வயது காஞ்சனா அந்த வடுக்களை காட்டிய போது அவரது தாயார் ஜெராணி அழுதார்.

இறுதி கட்டப் போரின் போது இராணுவத்தினர் எங்களைச் சுற்றி வளைத்தனர் அந்த சமயத்தில் தான் என் கணவரை நான் தவற விட்டுவிட்டேன் இராணுவத்திடமிருந்து தப்பிக்க கப்பல் ஏறி புறப்பட்டோம் துரதிருஷ்டவசமாக மலேசிய கடற்படை அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டோம்.

30 ஆண்டுகளாக நாங்கள் அனுபவித்த வேதனைகளும் சோகங்களும் சொல்லிலடங்கா என் கணவரைப் பிரிந்து இருக்கின்ற ஒவ்வொரு வினாடியும் கொடியதாக இருக்கின்றது என்று ஜெராணி கூறினார். போரில் அம்மாவையும் தம்பியையும் தொலைத்து விட்டேன் ஒரு தம்பி போரில் சிக்கி இறந்து விட்டார். இன்று தனிமரமாக இருக்கிறேன் வாழ்க்கையில் இன்னும் எத்தணை சோதனைகளை கடக்க வேண்டியிருக்கிறது என்று தெரியவில்லை. ஆண்டவன் ஏன் எங்களை இப்படிச் சோதிக்கிறான்? ஏன்று கிளிநொச்சியில் கல்வித்துறை அதிகாரியாகக பணியாற்றிய புவனேஸ்வரன் வயது 34 முகத்தில் சோகம் இழையோட பேசினார்

அவரது நண்பர் பிரகாஷ் வயது 33 கூறுகையில் அப்பாவை இராணுவத்தினர் கைது செய்து விட்டனர் அம்மாவையும் தங்கையையும் தவற விட்டுவிட்டேன் அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை அறிந்து கொள்ள இயலாமல் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

விடுதலையான மக்கள் அனைவரிடத்திலும் போரின் வலி குடிகொண்டிருக்கிறது அந்த வலியானது அவர்களின் உடலில் வடுக்களாகவும் இருக்கின்றது இன்னும் எத்தகைய சோதனைகளைக் கடக்க வேண்டியுள்ளது என்ற பயத்துடன் இருக்கின்ற அவர்கள் யாரவது எங்களை வாழ வையுங்கள் என்று மலேசிய தமிழர்களைப் பார்த்து உரிமையோடு கேட்கிறார்கள்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to இறுதிக் கட்டப் போரில் இலங்கை இராணுவத்தின் அராஜகம் ஈழத்தமிழர் கண்ணீர் பேட்டி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com