மே தினக் கூட்டங்களுக்கு அரச பணம் உள்ளிட்ட வளங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மே தினக் கூட்டம் தொடர்பில் அலரி மாளிகையில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரச நிறுவனங்களின் பிரதானிகள், உயர் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். மே தினக் கூட்டத்தின் போது அரசாங்கத்தின் பணத்தைப் பயன்படுத்தாது கூட்டத்தில் பங்கேற்கும் மக்களை உபசரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரச நிறுவனங்களின் பிரதானிகள் உறுதியளித்துள்ளனர்.
நிதி அமைச்சு மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இயங்கி வரும் அரச நிறுவனங்களின் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அர்ப்பணிப்புச் செய்யும் மக்களின் மே தினக் கூட்டம் என்ற தொனிப் பொருளில் ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை பொரளை கெம்பல் மைதானத்தில் மே தினக் கூட்டத்தை நடாத்த உள்ளது.

0 Responses to மே தினக் கூட்டங்களுக்கு அரச வளங்களைப் பயன்படுத்தக் கூடாது: ரணில்