இந்திய அரசாங்கத்தால் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை இன்னும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கு இந்திய உயர்நீதிமன்றத்தின் விசேட நீதிபதிகள் குழாம் இன்று பரிந்துரைத்துள்ளது.புதுடில்லி உயர்நீதிமன்றத்தின் விக்ரம்ஜித் சென் தலைமையிலான நீதிபதிகள் குழுவே அவ்வாறு பரிந்துரைத்துள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவிற்குத் தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் குறிப்பிட்டே அவர்கள் தடையை நீடிப்பதற்குப் பரிந்துரைத்துள்ளனர்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இந்திய மண்ணை தொடர்ந்தும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வருவதாகவும், அதற்கான போதுமான சான்றுகள் இருப்பதாகவும் அவர்கள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதன் பிரகாரம் இந்திய மத்திய அரசாங்கம் விடுதலைப்புலிகள் மீதான தடையை இன்னும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கு எடுத்த முடிவை இந்திய உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அனுமதித்துள்ளது.
இதற்கிடையே இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்கள் காரணமாக அங்கிருந்து தப்பியோடி இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் புகைப்படங்களுடனான விபரங்கள், கடவுச்சீட்டு இலக்கம் என்பன தற்போதைக்கு இந்திய அரசாங்கத்தின் பிரதான உளவுப் பிரிவிடம் இலங்கை அரசாங்கத்தால் கையளிக்கப்பட்டுள்ளதாக இன்று மாலை ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அதன் பிரகாரம் குறித்த நபர்கள் இந்தியாவிலிருந்து எந்த நாட்டிற்கும் வெளியேறிச் செல்ல முடியாதவாறு தடுக்கப்படுவதுடன், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளார்கள் என்றும் தெரிய வருகின்றது.
சீனாவின் வர்த்தக ஆதிக்கத்துக்குப் போட்டியாக இலங்கையில் காலூன்ற முனையும் இந்தியாவின் ஆவலை நன்கு புரிந்து கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதனை வைத்து இந்திய மண்ணில் தஞ்சம் புக நினைக்கும் தனக்கெதிரானவர்களை வேட்டையாட அருமையான திட்டமொன்றை வகுத்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி செயலகத்தின் புலனாய்வு அதிகாரியொருவர் அது குறித்த மேலதிக விபரங்களைத் தெரிவிக்க மறுத்து விட்டார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



so what? we try another way
naam ithu thodarbaga varuthappada veniya avasiyam illai eanentral iththadaiyanathu concres goverment indiyavil aachiseyum varai neetikkum enpathuthan unmaiyana vidaiyam irunthapothilum puligal meethana thadaiyai neeka mulu muyarchiyudan arumpaaduppatta tamizhanukkaka kuralkodukkakkoodiya arasiyal iyakkankalukkum tamizhar pathukappu iyakkankalukkum athanaisarnthulla pothu amaippugalukkum vazhakkarignarkal amaippugalukkum naam nantrytherivithukkolla vendum,irunthapothilum iththadaikalai udaithu vetry peruvom enpathil uruthiyaka iruppom,vizhunthan prabakaran entru ulagai emathum koottangalukkumunpu ezhunthan prabakaran entra seythimulam tamililathai meeteduthu athanmoolam arasiyal suyanirnaya anthasthu petra naadaka malarnthu athanmoolam tamililam kattamaikka padumaanal iththadai enna eththadaiyaiyum thaamakave udainthu pokum. ivvallamai na thalaivanukku undu ,tamil makkale kavalai vendaam.namakku thaidai pottadu silanaadakulthan,ithanai ventredukka nam thalaivanin pathaiyil seyalpaduvon
veelvathu naamaka irunthalum
velvathu nam inamaka irukkattum
--------thamililath thesiyath thalaivar methaku ve.prabakaran