பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மீள்குடியேற்ற அமைச்சு நிதியொதுக்கீடு தொடர்பான விவாதத்தின்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ள முரளிதரன் மேலும் கூறியதாவது:
புலம்பெயர் தமிழர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பிரிட்டனில் எமது மகிந்தவுக்கு எதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் இங்கே தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்திலும் தடுப்பு முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்களின் விடுதலையிலும் தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்றார்.
இவ்வாறான போராட்டங்களின் மூலம் மீளவும் விடுதலைப் புலிகளை உருவாக்க சிலர் முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட பிரித்தானிய குடியுரிமை பெற்ற மக்களுக்கு உரிமை காணப்படுகின்ற போதிலும் ஈழக் கொடிகளை ஏந்தி எவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்த முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.



0 Responses to லண்டன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விடுதலைப்புலிகளா?: முரளீதரன்