அரசை அறுபது ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்தாலும் சிங்கள அரசியல்வாதிகளுக்கு சர்வதேச நியமங்களை புரிந்து கொள்ளவோ அல்லது அதை கற்க வேண்டுமென்ற நாட்டமோ என்றும் இருந்ததில்லை.
அதனால்தான் முன்னர் காலஞ்சென்ற கதிர்கமரையும், இப்போது இன்னொரு தமிழ் பெண்மணியையும் சர்வதேச விவகாரங்களில் தலைமைதாங்க அனுமதித்திருக்கிறார்கள். தமிழ் துரோகிகள் நாளுக்கு நாள் புதிது புதிதாய் விளைவது ஆச்சரியமானது, ஆனால் கருணாநிதியே செய்த பிறகு கதிர்கமர்கள் நமக்கு சிறியவர்களாகிவிட்டார்கள்.
ஜெனீவாவில்…
சிறீலங்கா அரசுக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்திருக்கும் பிரேரணை கற்பழிப்புக் கொலை செய்தவனை அடுத்த வருடத்திற்குள் திருந்திவிடு என்று கூறும் கோமாளித்தனமான பிரேரணை. இந்தியா எவ்வளவு பாடுபட்டுள்ளது என்பதை அந்த கோமாள அறிக்கை விளக்குகிறது.
ஒரு கோமாளியின் கோமாளித்தனம் இன்னொரு கோமாளிக்கு கோமாளித்தனமாகத் தெரியாது என்பது பழமொழி..
அதனால்தான் இன்னொரு கோமாளியான சிங்கள அரசு அதை முட்டாள்தனமாக்கி தன்மானப் பிரச்சனையாக மாற்றிவிட்டது. அமெரிக்காவை தோற்கடிப்பார் மகிந்த ராஜபக்ஷ என்று சுற்றியிருக்கும் கோவேறு கழுதைகள் உருவேற்றிவிட்டுள்ளன.
அதிலிருந்து ஒரு படி மேலே போன சாரைப்பாம்பு விமல் வீரவன்ச தாறுமாறாகக் கருத்துக்களை வெளியிட்டு, அமெரிக்காவே ராஜீவ் காந்தியை கொன்றது என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட நபர்களை கண்ணால் பார்த்தவர்களையே பத்து ஆண்டுகள் சிறையில் போட்ட இந்திய அரசு வாய் திறக்கவில்லை. விமல் வீரவன்சவை ஒப்படையுங்கள் விசாரிக்க வேண்டுமென கோரவில்லை. ஒரு சில்லறை அரசியல்வாதிகூட அது குறித்து வாய் திறக்கவில்லை. அமெரிக்காவும் மறுப்புக்கூட தெரிவிக்கவில்லை.
மர்மம் இதற்குள்தான் கிடக்கிறது…
எப்படி…?
ராஜீவ்காந்தி கொலைக்கு அமெரிக்காவே காரணம் என்ற கருத்தை விமல் வீரவன்ச அரசின் தூண்டுதல் இல்லாமல் முன் வைத்திருக்கமாட்டார்.
இந்தியாவின் வாயைத் தைத்துவைத்திருக்கும் அம்பு இதுதான்.
அமெரிக்கா மீதே துணிந்து பழி சுமத்திய சிங்கள இனவாத அரசு, வன்னிப் போரின் கதாநாயகன் இந்தியாவே என்பதை அவிழ்த்துவிட அதிக நேரம் எடுக்காது என்ற எச்சரிக்கை கொடுக்கவே இந்த அம்பு எய்யப்பட்டது.
இந்திய அரசின் மௌனத்தின் பொருள் இதுதான்.
இது தெரியாமல் இந்தியா மௌனம் காக்கிறது காடு, மலை, புளியங்காய் என்று புசத்துகிறார்கள்..
இருந்தாலும்…
தமிழர்கள் துரோகத்தை மறந்துவிடும் இனம், அகபுற காரணங்களுக்காகவே நாம் ஜெனீவா போகவில்லை என்று கூறும் கேடுகெட்ட இனம் என்பது இந்தியாவுக்கு தெரியும்.
சிங்கள இனவாதத்தின் தன்மானப் பிரச்சனையையும், தமிழ்நாடு உணர்வலைகளையும் மௌனமாக நிறுத்துக் கொண்டிருக்கிறது இந்தியா.
கடைசியில் தமிழரை ஏமாற்றலாம்.. என்ற முடிவுக்கு அது வரும். புதுமாத்தளனுக்கும் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகும் இந்தியாவை நட்பு நாடென்று கூறும் மானங்கெட்ட தமிழன் தலையில் மிளகாய் அரைத்து முடிப்பதே இலாபம் என்றும் கணக்குப் போடும்.
ஆனால்…
சிறீலங்கா அரசுக்கு இதெல்லாம் தெரியாது..
அது இந்தியாவை மிக நெருக்கடியான இடத்தில் மாட்டிவிட்டுள்ளது. அமெரிக்காவை தோற்கடிப்பேன் என்று சவால்விட்டு மோதலில் இறங்கிவிட்டது.
இந்த மடைத்தனம் அமெரிக்காவை இப்போது நெருக்கடிக்குள் சிக்க வைத்துவிட்டது..
பிரேரணை தோற்கடிக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு அது தன்மானப் பிரச்சனையாகிவிடும். பிரபாகரனை தோற்கடித்த மகாவம்ச கதாநாயகன் மகிந்த ராஜபக்ஷ இப்போது அமெரிக்காவையே தோற்கடித்தார் என்று சிங்கள இனவாதிகள் போடும் சீனா வெடி அமெரிக்காவின் காதுகளில் கேட்க ஆரம்பித்துவிட்டது.
அவர்கள் ஜிம்மி கார்டரை இறக்கி விட்டுள்ளார்கள்.
தோல்வியடையக்கூடிய பிரேரணை ஒன்றை அமெரிக்கா கொண்டு வருமா..?
இனவாத வெறியில் சிறீலங்கா அதை எடைபோட மறந்துவிட்டது.
கொலைக்குற்றத்தை ஆயுள் தண்டனையாகக் குறைத்து…
பின்..
அதையே நன்னடத்தை குற்றமாக மாற்றி…
ஒரு வருடம் இந்தியாவின் சதுரப் பிணையில் போனாலே சரியென்றளவுக்கு இந்திய இராஜதந்திரிகள் அமெரிக்காவின் கால்களை கண்ணீரால் கழுவி சிறீலங்காவை காப்பாற்றியுள்ளார்கள்.
ஆனால்..
பரிதாபம் சிறீலங்காவிற்கு இது எங்கே விளங்கப்போகிறது.. தமக்கு எதிராக ஒரு பிரேரணை வெற்றி பெறக்கூடாது.. இது நமது தன்மானப் பிரச்சனை இதுதான் சிறீலங்காவின் உளவியல் சிக்கல்..
பிரேரணை வென்றால் இன்னொரு யூலைக்கலவரத்திற்கு தயார்.. இன்னொரு நோயாளி சம்பிக பூடகமாக மிரட்டுகிறார்.
இலங்கை இனப்பிரச்சனையை அறிவு பூர்வமாக அணுகாமல் தன்மானப்பிரச்சனையாக்கி இன்று போர்க் குற்றம்வரை வந்துள்ள சிறீலங்கா தானே தோண்டிய குழிக்குள் தானே விழப்போகிறது.
இதை எளிமையாக விளங்க இதோ ஓர் உதாரணம்.
கொலை செய்த ஒருவனை தனது வாதத்திறனால் காப்பாற்றுகிறான் சட்டத்தரணி. அவன் இருக்கும்வரை தனக்கு பாதகமில்லை என்று மேலும் பல கொலைகளை செய்கிறான் குற்றவாளி.
ஒரு நாள்..
அவன் குற்றமே செய்யாதிருக்க கொலைப்பழி விழுகிறது.. சாட்சியங்கள் அவனுக்கு எதிராக நிற்கின்றன.
தூக்குக் கயிற்றில் இருந்து அவனை காப்பாற்ற சட்டத்தரணியால் முடியவில்லை…
காரணம்…
விதி..
கொல்லும் போது வராத விதி வெல்லும் போது வரும்..!
இப்போது விதி வந்திருக்கிறது..
ஆம்.. நன்னடத்தை பிணையையும் விதி தூக்குத் தண்டனையாக மாற்றும். அதற்கு சிங்கள இனவாதம் இன்று உதாரணமாக நிற்கிறது.
அதைவிட பரிதாபம் மகாவம்சத்தின் கடைசி கதாநாயகன் குற்றவாளியானால் மகாவம்சமே களங்கப்பட்டுவிடும் என்பது தெரியாமல் அதை அவசரமாக எழுதிய புத்தபிக்குகள்தான்.
அலைகள் ஜெனீவா குத்தாட்டங்கள் மீதான பார்வை



"ஒரு வருடம் இந்தியாவின் சதுரப் பிணையில் போனாலே சரியென்றளவுக்கு இந்திய இராஜதந்திரிகள் அமெரிக்காவின் கால்களை கண்ணீரால் கழுவி சிறீலங்காவை காப்பாற்றியுள்ளார்கள்."
சதுரப்பிணையா? அல்லது சரீரப்பிணையா?
தமிழோடு விளையாட்டா?