அநுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று திங்கட்கிழமை மாலை கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்குமிடையே இடம்பெற்ற கடும் மோதல் மற்றும் அதைத் தொடர்ந்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்றுக்கும் மேற்பட்ட கைதிகள் கொல்லப்பட்டதுடன் எட்டு சிறைக்காவலர்கள் உட்பட 25 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
எனினும் இங்கு இடம்பெற்ற மோதல்கள் மற்றும் பல மணிநேர துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பெருமளவாயிருக்கலாமெனக் கூறப்பட்ட போதும் அதனை ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை.
இந்த மோதல்களின் போது சிறைச்சாலையில் பல பகுதிகள் தீவைக்கப்பட்டதில் நூலகம் உட்பட பல கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சிறைச்சாலையில் மிக நீண்ட நாட்களாக நிலவும் மூன்று முக்கிய பிரச்சினைக்குத் தீர்வு காணக் கோரி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 150 இற்கும் மேற்பட்ட கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
குடிநீர், உணவு மற்றும் இடவசதியை ஏற்படுத்தித் தருமாறு கோரியே இந்தக் கைதிகள் சிறைச்சாலை கூரைகளின் மேலேறி தங்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். எனினும் அன்றைய தினம் இது குறித்து சிறைச்சாலை அதிகாரிகளோ, நிர்வாகமோ பொருட்படுத்தாததுடன் இதனை அலட்சியப் படுத்தியுமுள்ளனர்.
இந்த நிலையில் நேற்றுக் காலை இந்தக் கைதிகளுக்கு ஆதரவாக மேலும் பல கைதிகள் ஒன்று சேர ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் நீராகரமின்றி சாகும்வரை போராட்டத்தில் குதிக்கவே அங்கு பதற்றமேற்பட்டது.
அந்தந்த பிரிவுகளைச் சேர்ந்த கைதிகள் தாங்கள் தாங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடங்களின் கூரைகள் மீதேறி போராட்டத்தை மேற்கொண்ட போது இவர்களுக்கு ஆதரவாக அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 70 தமிழ் அரசியல் கைதிகளும் இந்தப் போராட்டத்தில் குதித்தனர்.
வழக்கமாக தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடம் மட்டுமே எப்போதும் மூடப்பட்டிருக்கும். ஏனைய கைதிகளின் சிறைக்கூடங்கள் திறக்கப்பட்டேயிருக்குமென்பதால் அவர்கள் இந்தப் போராட்டத்தின் போது சிறைக்கூடங்களின் கூரைகள் மீதேறி எதிர்ப்பு நடவடிக்கையிலீடுபட்டனர்.
இவர்களது போராட்டத்தை கைவிடச் செய்ய சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவுமே கைகூடாத நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் இங்கு திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.
கல்லுகள், பொல்லுகள், இரும்புக் கம்பிகள் சகிதம் சிறைச்சாலையினுள் வந்த குண்டர்கள் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைக்காவலர்கள் முன்னிலையில் தங்கள் மீது கடும் தாக்குதலைத் தொடுத்ததாக கைதிகள் கூறுகின்றனர்.
கைதிகள் மீது சரமாரியாக கல்வீச்சு நடத்தப்பட்டவாறு அவர்கள் மீது கடும் தாக்குதல் தொடுக்கப்படவே அவர்களும் கற்களை வீசி பதில் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் இரு தரப்புக்குமிடையே கடும் மோதல் ஆரம்பமானதாகவும் கூறப்படுகிறது.
இவ்வேளையில் கைதிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் பலத்த துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாக கைதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாலை 5.15 மணியளவில் ஆரம்பமான பலத்த துப்பாக்கிச் சூடு இரவு 7.30 இற்குப் பின்னரும் தொடர்ந்ததாகவும் சுமார் இரு மணிநேரம் கடும் துப்பாக்கிக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்
இவ்வேளையில் சிறைச்சாலையின் பல பகுதியிலும் கைதிகளுக்கும் சிறைக்காவலர்கள் மற்றும் அங்கு புகுந்தவர்களுக்குமிடையே மோதல்கள் நடைபெற்றதாகவும் பல கட்டிடங்களுக்கும் தீவைக்கப்பட்டதாகவும் கைதிகள் தெரிவித்தனர்.
“எவ்’ வாட்டில் இருந்தவர்கள் மீதே கடும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பின்னர் அந்த துப்பாக்கிச் சூடு பரவலாக மிகக் கடுமையாக நடைபெற்றதாகவும் கைதிகள் கூறுகின்றனர். அத்துடன் சிறைச்சாலை சமையலறை, நூலகம், பி1, பி2 சிறைக்கூடங்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளன. இதனால் அவை மிக நீண்ட நேரம் எரிந்து கட்டிடங்களும் அங்கிருந்த உடைமைகளும் முற்றாக நாசமடைந்துள்ளன.
பி1,பி2 சிறைக்கூடங்களில், பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் சகல இனக் கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறைக் கூடங்கள் தீக்கிரையாக்கப்பட்ட போதும், இவை ஏற்கனவே திறக்கப்பட்டிருந்தால் பெருமளவு உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பல சிறைக்கூடங்களும் ஏனைய கட்டிடங்களும் தீவைக்கப்பட்டு அவை நீண்ட நேரம் தீப்பற்றி எரிந்ததால் அந்தப் பகுதியெங்கும் தீச்சுவாலைகள் வீசியதுடன் சிறைச்சாலைக்கு வெளியிலும் பெரும் புகைமண்டலமாயிருந்தது.
இந்த நிலையில் இரவு 7.30 மணிக்குப் பின்னர் துப்பாக்கிச் சூடுகள் ஓரளவு ஓய்ந்ததாகவும் எனினும் “ஏ’ வார்ட் சிறைக்கூடம் தீப்பற்றி எரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இவ் வேளையிலும் சிறைக்கூடங்களினுள் மோதல்கள் நடைபெற்றுள்ளன. கைதிகளும் தங்களுக்குகிடைத்தவற்றால் சிறைக்காவலர்களைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலையினுள் ஏற்பட்ட கலவர, மோதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பற்றி கேள்வியுற்று, கைதிகளின் குடும்பத்தவர்கள், உறவினர்கள், பொதுமக்களென பெருமளவானோர் சிறைச்சாலைக்கு வெளியே கூடிய அநேநேரம் அங்கு பெருமளவு படையினரும் பொலிஸாரும் கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் நேற்று நள்ளிரவு வரைபிரதம சிறை அதிகாரி எட்டு சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 25 பேர் வரை அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இறந்த மூன்று கைதிகளின் சடலங்களும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன. எனினும் அவை உடனடியாக அடையாளம் காணப்படவில்லை.
சிறைச்சாலைக்குள் நடந்த தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டபோதும் நள்ளிரவு வரை மோதல்கள் தொடர்ந்ததால் உயிரிழந்தோரின் சரியான விபரங்களை ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை.
மோதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டையடுத்து நிலைமையை கட்டுப்பாட்டினுள் கொண்டுவர பலத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலதிக படையினரும் பொலிஸாரும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

0 Responses to அநுராதபுரம் சிறையில் மோதல் மூவர் பலி 22 பேர் படுகாயம் (படங்கள் இணைப்பு)