இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பேசும் போது, போலிஸ் அதிகாரம் என்பது மிகவும் முக்கியமான விடயமாக இருக்கும்; என, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், ஏசியன் ட்ரிபியுன் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரம் என்பது மிகவும் முக்கியமானது என அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில 13ம் திருத்தச் சட்டத்துக்கு மேலாக சென்று ஒரு தீர்வு திட்டம் ஒன்றை வழங்கும் திறந்த மனதுடன் ஜனாதிபதி இருப்பதாக ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளர் லூசியான் ராஜகருணாநாயக்க ஏசியன் ட்ரிபியுனுக்கு தெரிவித்துள்ளார்.
எனினும் பொலிஸ் அதிகாரத்தை வழங்கும் நிலையில் அரசாங்கம் தற்போது இல்லை அவர் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று, புதிய தீர்வு விடயம் ஒன்று குறித்து இரண்டு தரப்பினராலும் இணங்கி ஆலோசிப்பதற்கு, ஜனாதிபதி விருப்பம் கொண்டுள்ளார்.
எனினும் 13ம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் இதுவரையில் பேசவில்லை எனவும் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவருடன் பேசுவதற்கு எண்ணியுள்ள போதும் தமது ஆட்சிக் காலத்தில் பொலிஸ் அதிகாரம் பகிரப்படாது என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாகவும் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

0 Responses to இனப்பிரச்சினை தீர்வின் போது பொலிஸ் அதிகாரம் அவசியம்: சுரேஸ் பிரேமசந்திரன்