Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழில் மீண்டும் பொலிஸ் பதிவு

பதிந்தவர்: தம்பியன் 20 January 2011

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் அனைத்து மக்களும் மீண்டும் பொலிஸ் பதிவை மேற்கொள்ள வேண்டுமென பொலிசாருடன் இராணுவத்தினரும் இணைந்து கூட்டாக வற்புறுத்த ஆரம்பித்துள்ளனர்.

யாழில் இடம்பெற்றுவரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக என்று கூறிக்கொண்டு பொலிசாரும் இராணுவத்தினரும் கூட்டாக வீடு வீடாகச் சென்று அங்குள்ள மக்களின் தகவல்களைத் திரட்டி வருகின்றனர்.

அதற்கு மேலதிகமாக வழமைக்கு மாறாக தற்போது யாழ். நகரப் பகுதியில் இராணுவத்தின் சோதனைச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டு, சோதனை நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளுக்கு வெளியில் மின்குமிழ்களை எரிய விடவேண்டுமென்றும் இராணுவத்தினர் வற்புறுத்த ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், குற்றவாளிகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக பொதுமக்களை இம்சைக்குள்ளாக்கும் விதத்தில் படைத்தரப்பின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக பல தரப்பினராலும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to யாழில் மீண்டும் பொலிஸ் பதிவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com