பொது நிகழ்வுகளிலும் வாழ்வாதாரத் திட்டங்களிலும் அளவுக்கதிகமாகக் காணப்படும்: இராணுவத்தினரின் தலையீட்டைஉடன் தடுத்து நிறுத்த வேண்டும்: மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக யாழ். மக்கள் கொதிப்பு
யாழ்.குடாநாட்டில் நடைபெறுகின்ற எந்தவொரு பொது நிகழ்ச்சியாயினும் வாழ்வாதாரத் திட்டமாயினும் அதில் இராணுவத்தினரின் பிரசன்னம் காணப்படுவதற்குக் கடும் விசனம் தெரிவித்துள்ளனர் குடாநாட்டுமக்கள். இராணுவத் தலையீடும் இராணுவச் சோதனைகளும் நிறைந்துள்ள நிலையில் மனித உரிமைகள் பற்றிப் பேச முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அவசர காலச் சட்டம், பயங்கர வாதத் தடைச் சட்டம் என்பவற்றை உடனடியாக நீக்கும்படியும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக மக்களின் விசனத்தையும் கோரிக்கைகளையும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் எடுத்துக் கூறினர்.இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் யாழ்ப்பாண சிவில் சமூகத்தினருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றுப் பிற்பகல் யாழ். மத்திய கல்லூரியில் இடம் பெற்றது.
குடாநாட்டில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எதிர்காலச் செயற்பாடுகள், தற்போதைய சூழ்நிலையில் காணப்படும் மனித உரிமைப் பிரச்சினைகள், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்பவற்றை ஆராய்வதற்காக இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதிலேயே சிவில் சமூகப் பிரதிநிதிகள் தமது மனக் குமுறல்களைக் கொட்டித்தீர்த்தனர்
சட்டமூலத்தின் தேவை
மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீனமாக இயங்கவேண்டும் என்று வலியுறுத்தினார் சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்குமான மக்கள் குழுவின் ஆலோசகர் பரமநாதன். அவ்வாறு இயங்க வேண்டுமாயின் அதற்கான அதிகாரங்களை வழங்கும் வகையில் சட்டமூலம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மக்கள் சுதந்திரமாகத் தமது கருத்துக்களை பொது இடங்களில் முன் வைக்க வேண்டுமாயின் அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத்தடைச் சட்டம் என்பவற்றை நீக்க வேண்டும்” என்றார் அவர்.
காவலில் உள்ளோர் விடுதலை
சந்தேகத்தின் பேரில் சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக விடு விக்கப்பட வேண்டும் என்றும் சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டது. இதற்கென விசேட நீதிக் குழு ஒன்றை அமைத்து காலவரையறை நிர்ணயித்து அரசு விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் கேட்கப்பட்டது.
சுருக்கு நீக்கப்பட வேண்டும்
மனித உரிமைகள் குறித்துப் பேச வேண்டுமானால் எமது கழுத்தில் உள்ள சுருக்கு முதலில் நீக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார் யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத் தலைவர் வி.கேசவன்.
“எங்கும் இராணுவத் தலையீடு. இன்று ஜே.வி.பி. கூடப் பேசுமளவுக்கு யாழ்ப் பாணத்தில் இராணுவ நிர்வாகம் உள்ளது. இன்று அனைத்து அரச பணிகளிலும் இராணுவத் தலையீடு உள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும். தற்போது சுதந்திரமாகக் கருத்துத் தெரிவிக்க முடியாத நிலையே உள்ளது” என்றார்.இராணுவத்தினர் சிவில் சமூகச் செயற்பாடுகளில் தலையிடுவதன் காரணமாகப் நிதிக் கொடையாளர்கள் நிதி வழங்கப் பின்னிற்கின்றனர் என்பதையும் அவர் அங்கு சுட்டிக் காட்டினார்.
முக்கிய விவரங்கள்
சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்ட முக்கிய விவரங்கள் வருமாறு:
■திடீரென ஏற்படும் இயற்கை அழிவுகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்குகிறார் கள். ஆனால், 30 வருடங்களாகப் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினை களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. உதவி வழங்குவதில் இப்படிப்பட்ட இருவேறு பார்வைகள் இருக்கக்கூடாது.
■யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப் படும் வாழ்வாதாரத் திட்டங்கள் அனைத் திலும் இராணுவத்தினரின் தலையீடு காணப்படுகின்றது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
■தடுப்பு முகாம்களில் இருந்து விடு விக்கப்படுபவர்கள் திரும்பவும் கைது செய்யப்படுகிறார்கள். விசாரணை எல் லாம் முடித்துத்தானே அவர்களை விடு வித்தீர்கள்? பின்னர் ஏன் மீண்டும் கைது செய்கிறீர்கள்?
■யாழ்ப்பாணத்தில் செயற்படுத்தப் படும் திட்டங்கள் மூலம் மக்களுக்கு அபிவிருத்தி கிடைக்கப் போகிறதா? அரசுக்கு அபிவிருத்தி கிடைக்கப் போகி றதா?
■ இராணுவ முகாம்களை மூடுகி றோம் மக்கள் குடியிருப்புக்களை விட்டு வெளியேறுகின்றோம் என்று கூறுகிறார் கள். ஆனால் பின்னர் வேறொரு இடத் தில் முகாம் அமைக்கிறார்கள்.
■சிவில் சமூகப் பிரதிநிதிகள் தமது கருத்துக்களைச் சுதந்திரமாகவும் துணி வாகவும் முன்வைக்கக் கூடிய சூழல் இல்லை. இராணுவ மயப்படுத்தப்பட்ட நிர்வாக அலகுகளே இங்கு ஆதிக்கம் செலுத்துகின்றன.
■பொது நிகழ்வுகளில் படைத் தள பதியின் பிரசன்னம் காணப்படுகிறது. பாடசாலை நிகழ்வுகளுக்கு படை அதி காரிகளை அழைக்கும்படி நிர்ப்பந்தம் கொடுக்கப்படுகிறது.
■யாழ்ப்பாணத்தில் நடந்த களவு, கொலைகள் என்பன திட்டமிட்டு உரு வாக்கப்பட்டனவே தவிர தன்னிச்சை யாக நடந்தவையல்ல. இன்று வரை தமி ழர்கள் எதிரிகளாகவே பார்க்கப்படுகி றார்கள்.
■மீள்குடியமர்வு என்பது, மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லும் நிகழ்வு. ஆனால் அரசியல் வாதிகள் ஏதோ தாமே மக்களை புதிதாக அங்கு குடிவைக்கிறார்கள் என்பது போல் நடந்து கொள்கிறார்கள்.
■நீண்ட காலமாகத் தொடரும் கடல் பிரச்சினைக்கு இன்னும் முடிவில்லை. இந்திய மீனவர்களால் எமது மீனவர்கள் நாளாந்தம் துன்பங்களை அனுபவிக்கி றார்கள். இரு நாட்டு அரசுகளும் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்கின்றனவே தவிர, எதுவும் நடக்கவில்லை.
■ இங்கு சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது? பொலிஸ் நிலையங்களுக்கு மக்கள் சென்றால் முறைப்பாட்டைப் பதிவு செய்வதற்கு முன்பாகவே தீர்ப்பு வழங்கப்பட்டு வழக்குத் திசை திருப்பப்படுகிறது. பதிவு செய்யாமலேயே பல முறைப்பாடுகள் தட்டிக் கழிக்கப்பட்டிருக்கின்றன

0 Responses to மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக யாழ். மக்கள் கொதிப்பு