யாழ்ப்பாணத்திற்கு வருவோர், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறுவோரை சோதனைக் கெடுபிடிக்கு உட்படுத்துவதற்காக முகமாலையில் சோதனை நிலையம் மீண்டும் சிறீலங்கா இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
போர் நிறுத்த காலப் பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறுவோரும் உள்ளே வருவோரும் முகமாலைப் பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினரின் சோதனைக் கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.
போர் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் முகமாலைப் பகுதியில் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கவில்லை. இந் நிலையில் தற்போது மீண்டும் முகமாலைப் பகுதியில் சோதனை நடவடிக்கைகளுக்கான அனைத்து நடவடிக்கைளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆண்கள் ஒரு புறமாகவும் பெண்கள் ஒருபுறமாகவும் சோதனைக் கெடுபிடிகளுக்கு உட்படுத்துவதற்கான அறிவிப்புக்கள் எழுதித் தொங்கவிடப்பட்டுள்ளதாக ஏ9 வீதியால் பயணித்த பெண்மணி ஒருவர் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

0 Responses to மீண்டும் முகமாலையில் இராணுவ சோதனைச் சாவடி