Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைத் தர அரசாங்கம் தயாராக இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டுகின்றார்.

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான கலந்துரையாடல்கள் சுமுகமாகப் போய்க் கொண்டிருப்பதாக கூறப்படுவதில் துளியளவும் உண்மை இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

கலந்துரையாடலில் பங்கேற்கும் அரச தரப்பு பிரதிநிதிகள் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து கவனம் செலுத்தத் தயாராக இல்லை. ஆயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரே நோக்கம் ஒன்றிணைந்த இலங்கைக்குள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் வண்ணமான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதாகும்.

ஆயினும் ஒன்றிணைந்த இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கலுக்குத் தயார் என்று அரசாங்கம் இதுவரை பகிரங்கமாக அறிவிக்கவில்லை. அந்த வகையில் அரசாங்கத்துடனான கலந்துரையாடல்களை தொடர்வதில் பலன் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

0 Responses to தமிழருக்கு அரசியல் தீர்வைத் தர அரசாங்கம் தயாராக இல்லை: பிரேமச்சந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com