Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமல் போன மலேசிய விமானம் குறித்து புதிய கோணத்தில் விசாரணை துவங்கப் பட்டுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் காணாமல் போன மலேசிய விமானம் குறித்து இன்னமும் ஒருத் தகவலும் கிடைக்காத நிலையில், இப்போது விசாரணையை வேறு கோணத்தில் முடுக்கி விட்டுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

அதன் படி விமானிகள், அதில் பயணித்த பயணிகள், மற்றும் விமானப் பணியாளர்களிடம் தற்போது புதிய கோணத்தில் விசாரணையை தொடங்க உத்தரவிடப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், தைவான் உளவுத் துறை, கடந்த 5ம் திகதியே சீனாவுக்கு தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்தக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்ததாகவும், சீன அரசு இதை அலட்சியம் செய்துள்ளது என்றும் தகவல் வெளியிட்டுள்ளது.

4tamilmedia

0 Responses to காணாமற் போன விமானம் குறித்து புதிய கோணத்தில் விசாரணை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com