Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியின் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு வாடுவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார்

தில்லியில் கனிமொழியைச் சந்தித்துவிட்டு புதன்கிழமை இரவு சென்னை திரும்பிய அவர் சி.ஐ.டி. காலனியில் உள்ள வீட்டில் நிருபர்களிடம் கூறியது:

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, ராசா, சரத்குமார் ஆகியோரைச் சந்திப்பதற்காக மட்டுமே தில்லி சென்றேன். மனிதத்தன்மையற்ற இடத்தில் கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக அவரது உடலில் வீக்கமும், வெப்பத்தால் கொப்புளங்களும் ஏற்பட்டுள்ளன. சரத்குமாரும் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.

பத்திரிகைகளில் வெளியான தவறான செய்திகளின் அடிப்படையில்தான் கனிமொழி மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அந்தத் தவறான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதை தனது கடமையாகக் கருதி சி.பி.ஐ. செயல்படுகிறது.

தி.மு.க.வின் நிலைப்பாடு: ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் முதல்வராக இருந்தாலும் அதுதொடர்பான விசாரணை வரம்புக்கு உட்படுத்த சட்டம் கொண்டுவந்துள்ளோம். லோக்பால் சட்ட மசோதா விவகாரத்திலும் எங்களது நிலைப்பாடு அதுதான். ஊழலுக்கு எதிரான நல்ல முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். ஆனால், உள்நோக்கத்துடன் நடக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவளிக்க முடியாது. தி.மு.க., காங்கிரஸ் உறவில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

0 Responses to உடலில் கொப்புளங்களுடன் வாடுகிறார் கனிமொழி: கருணாநிதி உருக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com