சிறீலங்கா போர்க்குற்ற ஆவணங்களில் பகுதி 2 ஐ வெளியீடு செய்த சனல் 4 இத்துடன் நின்றுவிடும் என்று கூறுவதற்குரிய தடயங்கள் எதுவும் நிகழ்ச்சியில் காணப்படவில்லை.
போர்க்குற்ற நடவடிக்கை வேண்டும் என்ற தெளிவான கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. இதை மறுக்குமுகமாகவும், உண்மையை அழிக்குமுகமாகவும் ரஸ்யா, சீனா இரண்டும் முயலும் பட்சத்தில் மேலும் மோசமான ஆவணங்களை சனல் 4 வெளியிட வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது.
படுமோசமான ஆவணங்கள், சற்லைற் படங்கள் மேலும் வெளிவர வாய்ப்பிருப்பதையும் அந்த நிகழ்வு காட்டுகிறது. ஐ.நா மன்றில் சிறீலங்காவை காப்பாற்றும் முயற்சிகள் கூடக்கூட அதற்கமைவாக காணொளிகளும் படிப்படியாக வெளிவர வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது. சனல் 4 இத்துடன் முடிந்துவிடும் விடயமாக தெரியவில்லை.



0 Responses to இராஜதந்திர நகர்வுகளுக்கு ஏற்ப மேலும் காணொளிகள்