Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரேஷ்ட ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமின் கொலை வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கெொள்ளப்பட்ட பேோது, இவ்வழக்கின் முக்கிய சாட்சியாளர்கள் ஆறுபேர் நீதிமன்றத்திற்கு வருகை தராமை காரணமாக வழக்கை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

குறித்த முக்கிய சாட்சிகள் ஆறுபேரும் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத நிலையில் வழக்கு விசாரணையை மேற்கொள்ள முடியாது எனவும் வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்கும் படியும் அரசதரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

அரச வழக்கறிஞரின் கோரிக்கைக்கு இணங்க வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பி.சூரசேன உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இன்றைய தினம் சமூகமளிக்க தவறிய முக்கிய சாட்சிகள் ஆறுபேரையும் அடுத்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் தர்மரத்னம் சிவராம் 2005ஆம் ஆண்டு கொல்லப்பட்டமைக்கு ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தராஜா என்று அழைக்கப்படும் பீட்டர் என்பவர் மீதே வழக்கு தொடரப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஊடகவியலாளர் சிவராம் கொலை வழக்கு ஒத்திவைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com