Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற தூதுக்குழு தென்னாபிரிக்காவுக்கு பயணமாகியுள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இக்குழு தென்னாபிரிக்காவின் தலைநகரான டர்பனுக்கு சென்றுள்ளது.

தென்னாபிரிக்காவில் ஆளும் கட்சியான தென்னாபிரிக்க காங்கிரஸின் 100 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கிடைத்த அழைப்பை ஏற்று இத் தூதுக்குழு அங்கு சென்றுள்ளது.

இக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் எதிர்வரும் 10ஆம் திகதி அளவில் நாடு திரும்புவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த இக்குழுவினர் அந்த விஜயத்திற்குப் பின்னர் தென்னாபிரிக்காவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Responses to கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் குழு தென்னாபிரிக்கா விஜயம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com