Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக அமைச்சர் சண்முகம் உறவினர் கொலை வழக்கில் பாமக நிறுவனர் ராமதாசின் தம்பி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். ஆறு ஆண்டுகளூக்கு முன்பு நடந்த சம்பவத்தில் இதுவரை அமைதியாக இருந்த சிபிஐ இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், திண்டிவனத்தில் கல்லூரி பேராசிரியரை தாக்குவதற்கு தூண்டியதாக புகார் கூறப்பட்டு, பாமக நிறுவனர் ராமதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (26.1.2012) மதுரையில் ஐந்து மாவட்டங்களுக்கான பாமக பொதுக்குழு கூட்டம் மதுரை செல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த ஆலோசனைக்கூட்டதில் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ‘’கொலை, கொள்ளை நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது.

இந்நிலையில், அமைதியாக இருக்கும் எங்கள் மீது அதிமுக அரசு பொய்வழக்கு போட்டுள்ளது. அதிமுக அரசு உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தொடுத்துள்ளது.

அதிமுக அமைச்சரின் தூண்டுதலின் பேரிலேயே காவல்துறை இந்த வழக்கை தொடுத்துள்ளது. நாங்கள் பயப்படமாட்டோம்.

சட்டப்படி வழக்கை எதிர்கொள்வோம்’’ என்று தெரிவித்தார்.

0 Responses to அமைதியாக இருக்கும் எங்கள் மீது அதிமுக அரசு பொய்வழக்கு போட்டுள்ளது:அன்புமணி ராமதாஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com