சென்னையில் இன்று (21.02.2012) தேமுதிக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேமுதிகவின் 7வது பொதுக்குழுக் கூட்டமும் நடைபெற்றது.
ஆட்சிப் பொறுப்பேற்ற 6 மாதத்தில் பேருந்து கட்டணம், பால் விலையை உயர்த்திய அதிமுக அரசுக்கு பொதுக்குழுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். 10 மணி நேர மின்வெட்டை அமல்படுத்தி தமிழகத்தை இருண்ட மாநிலமாக மாற்றிய பொறுப்பற்ற அரசிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே விலைவாசி உயர்வால் பொதுமக்கள் அல்லல்பட்டு வரும் நேரத்தில், மின்சார கட்டணத்தை உயர்த்தும் அரசின் முடிவுக்கும் கண்டனம் தெரிவித்துள்ள தேமுதிக பொதுக்குழு, மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்சனைகளுக்கு தென்னக நதிகளை இணைக்கும் முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
கூடங்கும் அணுமின் நிலைய விவகாரத்தில் போராட்டக்காரர்கள் அச்சத்தை போக்கும் வகையில், நடவடிக்கைகள் எடுத்து அமைதியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றும் பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்தை இருண்ட மாநிலமாக மாற்றிய பொறுப்பற்ற அரசிற்கு கண்டனம்: தேமுதிக
பதிந்தவர்:
ஈழப்பிரியா
21 February 2012



0 Responses to தமிழகத்தை இருண்ட மாநிலமாக மாற்றிய பொறுப்பற்ற அரசிற்கு கண்டனம்: தேமுதிக