சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் உன்னத பண்புகளைத் தந்த பிரென்சு தேசத்தில், தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை என முழங்கியவாறு ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபை நோக்கிய நடைப்பயணம் உறுதியுடன் நடை போடுகின்றது.
கடந்த சனவரி மாதம் 28ம் நாள், லண்டனில் இருந்து தொடங்கிய இந்த நடைப்பயணம், 725 கிலோ மீற்றர்களைக் கடந்து உறுதியுடன் வீறுநடை போட்டுக் கொண்டுள்ளது.
தமிழர் மீதான சிறிலங்கா அரசினது இனப்படுகொலை குறித்தான சுயாதீனா சர்வதேச விசாரணை , தமிழீத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை ஐ.நா நிறுவவேண்டும், தமிழீழத்தில் பொதுவாக்கெடுப்பொன்று நடத்தப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளை இந்த நடைப்பயணம் வலியுறுத்துகின்றது.
கடந்த சனவரி 28ம் நாள் லண்டனில் இருந்து தொடங்கிய இந்த நடைப்பயணம், ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் தொடங்குகின்ற பெப் 27ம் நாளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீதிக்காய் ஒன்றுபடுவோம் எனும் மக்கள் எழுச்சிப் போராட்ட நிகழ்வில் நிறைவு செய்யவுள்ளது.
சர்வதேச சுயாதீன விசாரணையே வேண்டும்! 25வது நாளாக தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்
பதிந்தவர்:
Anonymous
21 February 2012



0 Responses to சர்வதேச சுயாதீன விசாரணையே வேண்டும்! 25வது நாளாக தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்