Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புலம்பெயர் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாகவே அமெரிக்கா செயற்பட்டு வருவதாக முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில், இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் அமெரிக்காவின் திட்டம், தமிழ் புலம்பெயர் மக்களின் அழுத்தம் காரணமாகவே முன்னெடுக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், இலங்கைக்கு எதிராக எப்போது தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பது தெரியவில்லை. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் மிகத் தெளிவாக இலங்கைப் பிரதிநிதிகள் விளக்கம் அளித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், சில மேற்குலக நாடுகள் மிகவும் அநீதியான முறையில் இலங்கைக்கு எதிராக அழுத்தம் செலுத்த முற்படுகின்றது.

சுவிட்சர்லாந்தில் 50000 பேர், கனடாவில் ஐந்து லட்சம் பேர், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளிலும் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள், பாரம்பரியமாக வாழவே இவ்வாறு மேற்குலக நாடுகளின் மீது அழுத்தங்களை செலுத்தி வருவதாக மொஹான் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to அமெரிக்காவின் செயற்பாடுகளுக்கு பு.தமிழர்களே காரணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com