Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவு துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு எழுதி இருந்த கடிதத்தில், இலங்கையை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், பிரபலங்களும் தனிப்பட்ட பயணமாக தமிழகம் வந்து கொண்டிருக்கிறார்கள். இது குறித்து தமிழக அரசுக்கு தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படுவது இல்லை.

இலங்கை அதிபரின் மைத்துனர் திருக்குமரன் நடேசன், ஜனவரி மாதம் 9 மற்றும் 10-ந்தேதிகளில் ராமேஸ்வரத்துக்கு பயணம் மேற்கொண்டார்.

அங்கு அவரை சிலர் தாக்க முயற்சி செய்தனர். அவர் வருகை பற்றி இலங்கை அரசாங்கத்திடம் இருந்தோ, அல்லது இந்திய அரசிடம் இருந்தோ தமிழக அரசுக்கு தகவல் எதுவும் வராததால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்க முடியவில்லை.

நடேசனுக்கு எதிராக நடந்த தாக்குதல் முயற்சி தொடர்பாக, தென் இந்தியாவுக்கான இலங்கை துணை தூதரிடம் இருந்து தமிழக அரசின் தலைமைச் செயலாள ருக்கு கடிதம் வந்தது.

அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் ஏற்றுக் கொள்ள முடியாததும் முழுவதும் நியாயமற்றதும் ஆகும்.

இலங்கையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் தகவல் எதுவும் தெரிவிக்காமல் அடிக்கடி இங்கு வருகை புரிவதால் தமிழக அரசு சந்தித்து வரும் சிரமங்களை சுட்டிக்காட்டி தமிழக அரசு கடிதம் எழுதி இருந்தார்.

இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ’’இந்த நிலை குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். வெளியுறவுத்துறை அமைச்சகம் குறித்து நடவடிக்கைகள் எடுக்கும் போது ஜெயலலிதாவின் கருத்தும் பரிசீலிக்கப்படும்’’ என்று கூறியுள்ளார்.

0 Responses to ஜெயலலிதா கருத்து : எஸ்.எம்.கிருஷ்ணா பதில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com