Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரச சார்பாற்ற நிறுவனத்தின் குரலாக மட்டுமின்றி, இலங்கையின் இறுதி மோதல்களின் முடிவில் இராணுவத்திடம் தங்களுடைய தந்தையை கையளித்த மூன்று பிள்கைளின் தாயாகவும் இங்கு வந்திருக்கிறேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் நேற்று சனிக்கிழமை உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

என்னுடைய பிள்ளைகள் இன்னமும் அவர்களது தந்தையைத் தேடுகின்றனர். எனது கணவர் எழிலன் ஒரு அரசியல் தலைவர். மோதல்கள் நிறைவடைந்த போது எம் கண் முன்னே அவர் இலங்கை இராணுவத்தில் சரணடைந்தார். ஐந்து வருடங்கள் கடந்தும் இலங்கை அரசாங்கம் எமது பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கவில்லை. எனது பிள்ளைகளை போன்று மேலும் பல்லாயிரம் கணக்கான பிள்ளைகள் அவர்களது உறவுகளை தேடுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனந்தி தன்னுடைய உரையில் மேலும் தெரிவித்ததாவது, “நான் தற்போது உங்கள் முன் உரையாடும் சந்தர்ப்பத்திலும் 13 வயதுடைய விபூசிகா பாலேந்திரன் எனும் பிள்ளையை இலங்கை இராணுவம் கைது செய்துள்ளது. தனது சகோதரரை விடுவிக்குமாறு கண்ணீருடன் பல ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஒருவர். இந்த கைதானது அநீதியான முறையில் ஒவ்வொரு சிறுவர் ஆர்ப்பாட்டகாரர் மீதான பகிரங்க அச்சுறுத்தலாகும். ஆயுதங்களை ஏந்திய இராணுவத்தினர் எமது சிவில் வாழ்க்கையின் ஒவ்வொரு பாகங்களையும் நிர்வகிக்கின்றனர். அங்கு 5 பொதுமக்களுக்கு ஒரு இராணுவம் என்ற விகிதாசாரமே காணப்படுகின்றது” என்றார்.

0 Responses to தந்தையைத் தேடும் மூன்று பிள்ளைகளின் தாயாக இங்கு வந்திருக்கிறேன்; ஐ.நா.வில் அனந்தி சசிதரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com