நெடுந்தீவில் சிறுமியொருவர் கொடூரமாக வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஈ.பி.டி.பி கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளது என தீவக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்திய 12 பேர் நெடுந்தீவு ஈ.பி.டி.பி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
கொலை வெறியில் ஈடுபட்ட தனது கட்சி உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்குவதை விடுத்து டக்ளஸ் தேவானந்தா பொது மக்களை அச்சுறுத்தியதன் மூலம் மீண்டும் ஒருமுறை தனது வெறித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ள நெடுந்தீவு மக்கள் இது தொடர்பில் தமது கடும் விசனத்தையும் வெளியிட்டுள்ளனர்.
ஈழத்திலும் இந்தியாவிலும் பல கொலைகளுடன் தொடர்புபட்டுள்ள நிலையில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள டக்ளஸ் தேவானந்தா வெள்ளைப் புறா வேடமிட்டு ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வில் கலந்துகொண்டுவிட்டு வந்த உடனேயே தாயகத்திலுள்ள தமிழ் மக்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளமை குறித்து யாழ் குடாநாட்டு மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நெடுந்தீவிலுள்ள யேசுதாசன் லக்சினி என்ற 13 வயதுச் சிறுமி கடந்த சனிக்கிழமை கடைக்குச் சென்றுகொண்டிருந்த போது ஈ.பி.டி.பி உறுப்பினரான கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்பவரால் கொடூரமான முறையில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்;ப்பட்டார். இதனால் கொதித்தெழுந்த நெடுந்தீவு மக்கள் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஈ.பி.டி.பி இன் கோட்டையாகிய நெடுந்தீவிலேயே அவர்களுக்கெதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈ.பி.டி.பி இனரின் அட்டூழியங்களை எவ்வளவு காலத்திற்குத்தான் பார்த்துக்கொண்டிருக்க முடியுமெனறு கேள்வியெழுப்பிய நெடுந்தீவு மக்கள் மேற்படி போராட்டத்தின் போது ஈ.பி.டி.பி இனருக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.
தானும் தனது கட்சியினரும் தமிழ் மக்களுக்குச் செய்த அட்டூழியங்களுக்காக கச்சதீவு புனித அந்தோனியாரிடம் பாவ மன்னிப்புக் கேட்பதற்குச் சென்ற டக்ளஸ் தேவானந்தா தீவகத்தில் நின்ற போதே ஈ.பி.டி.பி க்கு எதிராக மக்கள் போராட்டம் செய்தமையால் ஈ.பி.டி.பி தலைமை கடும் சீற்றமடைந்ததாகக் கூறப்படுகின்றது.
இதனால் ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்திய 12 பேர் மறுநாள் திங்கட்கிழமை (05-03-2012) நெடுந்தீவிலுள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர். நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்ட டக்ளஸ் தேவானந்தா out mic இல் உரையாடி அச்சுறுத்தியுள்ளார். “தீவகத்தில் இருந்துகொண்டே எங்களுக்கு எதிராகச் செயற்படுகிறீர்களா? இதுவே உங்கள் இறுதிச் செயற்பாடாக இருக்கட்டும். இனிமேலும் எங்களுக்கு எதிராகச் செயற்படக்கூடாது. அவ்வாறு செயற்பட்டால் அனைவரையும் தீர்த்துக்கட்டிவிடுவோம்” என்றும் டக்ளஸ் எச்சரித்துள்ளார்.
இந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாத நெடுந்தீவு மக்கள் “ஏற்கனவே ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை வழக்கிலிருந்து குற்றவாளி ஜெகதீஸ்வரனை வெளியே எடுத்ததைப் போன்று இனியாவது அவனைச் சிறை மீட்க வேண்டாம். அவன் தண்டனை அனுபவிக்கட்டும்” என்று டக்ளஸிடம் கேட்டுள்ளனர். இதற்குப் பதிலளித்த டக்ளஸ் “ஜெகதீஸ்வரன் எங்களுக்குத் தேவையானவர். அவர் விரைவில் வெளியே வருவார். அப்படியாயின் அவர் நெடுந்தீவிற்கு வராமல் பார்த்துக்கொள்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.
நெடுந்தீவில் மக்களுக்கு டக்ளஸ் கொலைமிரட்டல் - சிறுமியின் கொடூரக்கொலையின் எதிரொலி!
பதிந்தவர்:
Anonymous
08 March 2012



ஒற்றைத்தமிழ்மகன் உள்ளவரை உள்ளத்தே;எந்நிலையிலும்,எவ்விடத்தும் மற்றயினத்தர்க்கே மட்டியிடான்; மட்டியிட்டால் பெற்றவள் மேல் அய்யம்; பிறப்பின் மேல் அய்யம் என்று சாற்று; அவன் தானே நீ, சென்னை சூளைமேட்டிலே, சோடாக்கடையிலே, பீடாவிற்க்காக சண்டையிட்டு நிராயுதபாணியான அப்பாவித்தமிழனை சுட்டுக்கொன்றுவிட்டு ஒடி வீட்டிற்க்குள் தாழிட்டு பதுங்கிய குடிகார குப்பை தானே நீ; இந்தியராணுவ உளவுக்கயவர்க்களின் கைங்காரியத்தால் உலாவரும் நீ, எம் மாவீரர்களின் காலடித்தூசிற்க்கு தகுதி பெறாத நீயா? எம் தமிழ்மக்களின் உரிமை பற்றி பேசத்தகுதியானவன்?? சிங்களக்கயவர்களின் கால்களை நக்கிப்பிழைக்கும் கருவின் குற்றமே!! ஈனப்பிறவிகளே!!எம் வீரத்தமிழ் வரலாறு ஒன்றே உங்களை நைய்யப்புடைத்துவிடும்.