இன்று (29.03.2012) அதிகாலை வழக்கம்போல நடைப்பயிற்சிக்கு சென்ற ராமஜெயம், வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி லதா, அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் ராமஜெயம் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கல்லணை சாலையில் கிடந்தது.
திருச்சி அரசு பொதுமருத்தவமனையில் வைக்கப்பட்டிருந்த ராமஜெயத்தின் உடலை அவரது சகோதரரும், திமுக முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு பார்த்தார். அப்போது கே.என்.நேரு, தனது தம்பி உடலை பார்த்து தலையிலும், மார்பிலும் அடித்துக்கொண்டு அழுத காட்சி, அனைவரையும் கண்ணீர் விட வைத்தது.
தொடர்ந்து பிரேத பரிசோதனைக்குப் பின்னர், ராமஜெயத்தின் உடல் அவரது இல்லத்துக்கு செல்லப்பட்டது.
அங்கு ஏராளமான திமுகவினர் ராமஜெயத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ராமஜெயம் கடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தால் திருச்சியில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. இதனால் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.
0 Responses to ராமஜெயத்தின் உடலை பார்த்து கதறி அழுத கே.என்.நேரு!