திருமணமான பெண்கள் வீடுகளைவிட தெருக்களில் பாதுகாப்பாக உள்ளனர் என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மனைவியைக் கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து அக்கணவர் மேல்முறையீடு செய்திருந்த மனுவை இன்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது வீடுகளில்தான் பெண்கள் கணவனால் கொலை செய்யப்படுகின்றனர் என்றும் தெருக்களில் நடக்கும் கொலைகளில் பத்தில் ஒன்பது பேர் ஆண்கள்தான் என்றும் நீதிபதிகள் விளக்கம் கூறினர்.
இதை வைத்துப் பார்க்கும்போது வீடுகளில் இருப்பதைவிட பெண்கள் தெருக்களில் மிகப் பாதுகாப்பாகவே இருக்கின்றனர் என்றுதான் தெரிய வருகிறது என்று கூறியுள்ளதோடு மனுதாரரின் மேல் முறையீட்டு மனுவை ரத்து செய்துள்ளனர் என்று தெரிய வருகிறது.

0 Responses to திருமணமான பெண்கள் வீடுகளைவிட தெருக்களில் பாதுகாப்பாக உள்ளனர்: டெல்லி உயர் நீதிமன்றம்