Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர் தாயகத்தில் சிங்கள அரசின் நில அபகரிப்புக்கு எதிராகவும், தாயக மக்களின் போராட்டங்களுக்கு வலுவூட்டவும் கனடாவின் வன்கூவரில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

தாயகத்தின் திருமுறிகண்டியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் போராட்டத்திற்கு சமாந்திரமாக, புலம்பெயர் நாடுகளிலும் போராட்டங்கள் அதே நாளில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதனொரு அங்கமாக, கனடாவின் வன்கூவர் North Side of Art Gallery பகுதியிலும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

குறுகியகால முன்னேற்பாடாக இருந்த போதும், குறித்தளவான மக்கள் கலந்து கொண்டு தாயக மக்களுக்கு தங்களது தோழமையுணர்வினை தெரிவித்திருந்தனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில், கனடாவின் ரொறன்ரோ பகுதியிலும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

0 Responses to தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு: கனடா வன்கூவரில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com