Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னியில் மீளக்குடியமரும் குடும்பங்கள் தமக்கான வீடுகளை அமைத்துக்கொள்வதற்கு இந்தியா நேரடியாக நிதி உதவி வழங்குவதை அரசாங்கம் ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல வீறாப்புடன் தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றுத் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் இடம்பெயர்ந்து இப்போது மீளக்குடியமரும் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக்கொள்ள நேரடியாக நிதியுதவி வழங்கப்படுமென இந்திய உள்துறை அமைச்சர் .சிரம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என செய்தியாளரொருவர் கேள்வி எழுப்பினார். இக்கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து கூறியவை வருமாறு:-

இந்தியா பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக நிதியுதவி வழங்குவதென்பது இலங்கையின் இறைமையைப் பாதிப்பதாக அமையும். இந்தியா நேரடியாக இந்த உதவியை அரசுக்கு வழங்கவேண்டும் என்பதல்ல. வேறு மார்க்கமாகவும் வழங்கலாம்.

இந்திய விஜயத்தின்போது ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான முக்கிய அமைச்சர்களுடன் பேச்சு நடத்தியபோதும் மீளக்குடியமர்த்தப்படுபவர்களின் வீட்டுப்பிரச்சினை குறித்தும் பேசப்பட்டது. 50 ஆயிரம் வீடுகளை அமைக்க 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கும் என இந்தியத் தரப்பு அப்போது தெரிவித்தது.

தமிழக எம்.எல். ஏக்கள் 21 பேருடனும் நாம் பேச்சு நடத்தினோம். பல கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இக்குழுவில் அங்கம் வகித்தனர். இவர்கள் அனைவரும் யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவது குறித்தே அதிக கவனம் செலுத்தினர். அவர்களை இலங்கைக்கு வந்து நேரடியாக நிலைமைகளை ஆராயும்படி ஜனாதிபதி அழைப்புவிடுத்தார். அநேகமாக அவர்கள் வெகுவிரைவில் இலங்கை வருவர்.

ஜனாதிபதி இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சிவராஜையும் சந்தித்துப் பேசினார். அவரும் இந்திய அரசின் நிலைப்பாட்டையே கொண்டிருந்தார். எதிர்க்கட்சி, கொள்கை ரீதியாக அரசுடன் முரண்பட்டாலும் அரசின் கொள்கையுடன் இணைந்து செயற்படுவதைக் காணக்கூடியதாகவிருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 Responses to தமிழர்களுக்கு இந்தியா நேரடியாக உதவுவதை சிறிலங்கா ஒருபோதும் அனுமதிக்காது: ரம்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com