Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவின் இலட்சிய Tablet கணிணியான ஆகாஷ், உலகில் விலை குறைந்த Tablet கணிணியாகக் கருதப்படுகின்ற போதும் இதன் மீது சர்ச்சைகள் தொடர்கின்றன.

ஆக்டோபர் 2011 இல் ஆகாஷ் இன் முதற் பதிப்பு வெளியான போதே இச் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன. இதையடுத்து சமீபத்தில் வெளியான அதன் அப்டேட் பதிப்பான ஆகாஷ் 2 பல சாதகமான விமர்சனங்களையே முதலில் எதிர் கொண்டது.

எனினும் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கையின் படி இந்த சாதகமான விமர்சனங்கள் அனைத்தும் ஆகாஷ் 2 இன் உண்மையான தயாரிப்பாளர்களான சீனாவுக்கே சென்று சேர வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, 'ஆகாஷ் Tablet கணிணிகளைத் தயாரிக்கும் இந்தியாவின் Datawind Ltd நிறுவனம் சீனாவின் சென்ஷென் மற்றும் ஹொங் கொங் இல் உள்ள 4 நிறுவனங்களிடம் இருந்து ஆக்டோபர் 26 இற்கும் நவம்பர் 7 இற்கும் இடையே சுமார் 10,000 Tablet கணிணிகளை வாங்கியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

எனினும் இப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ள இச் செய்திகள் அனைத்தையும் மறுத்த Datawind நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) சுனீட் டுலி pkr.in எனும் இணையத் தளத்துக்கு கருத்துத் தெரிவிக்கையில் தனது நிறுவனம் சில நிறுவனங்களுடன் உள் ஒப்பந்த அடிப்படையிலேயே Tablet கணிணிகளைத் தயாரிப்பதாகக் கூறினார்.

இவர் மேலும் கூறுகையில், 'எமது வியாபார மாதிரி ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் மாதிர்களுடன் பல ஒற்றுமைகளை உடையது. இதற்காக நாம் அக் கம்பனிகளுடன் உள் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். மேலும் எமது Tablet இல் உள்ள மதர் போர்ட் போன்ற சில முக்கிய பாகங்களை சில சீன நிறுவனங்களுடன் வசதிகளைப் பயன்படுத்தி உள் ஒப்பந்த அடிப்படையில் தயாரித்திருக்கிறோம். ஆனால் இறுதிக் கட்ட பொருத்தும் பணிகளும் அக்கணிணி இயங்கத் தேவையான மென்பொருள் வடிவமைப்பும் (Final assembly and programming) இந்தியாவில் தான் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்றார்.

நவம்பர் 11 தேசிய கல்வி நாளில் நியூடெல்லியில் இடம்பெற்ற வைபவத்தில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகாஷ் 2 Tablet கணிணிகளை உத்தியோக பூர்வமாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஆகாஷ் 2 Tablet கணிணி சீனாவில் தயாரிக்கப் பட்டதல்ல - டாட்டாவின்ட் நிறுவனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com