Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜோ.பிரிட்டோ சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை பிரச்சனை தொடர்பாக மாணவர்களின் போராட்டம் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. தேர்வு காலங்களாக இருப்பதால் கல்லூரிக்கும், படிப்புக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாதவாறு நூதனமான முறையில் அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறோம்.

ஆனால் மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் கல்லூரி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையை மாற்றி கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்களும் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை தடுத்து, தாக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு நடந்தால் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும். 

இலங்கை தமிழர்கள் நலனுக்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது போல், பாராளுமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றும் வரை மாணவர்கள் போராட்டம் தொடரும். இனப்படுகொலை நடத்தப்பட்ட தினமான மே மாதம் 18-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் “மாணவர்கள் ஊர்வலம்“ நடத்த முடிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். 

0 Responses to இலங்கையில் இனப்படுகொலை நடந்த தினமான மே 18ந் தேதி ஊர்வலம்! மாணவர் கூட்டமைப்பினர் தகவல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com