Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


¨இலங்கை வவுனியாவில் உள்ள கோவிலில் கும்பாபிஷேக விழாவினையொட்டி நடைபெற இருந்த இசை நிகழ்ச்சிக்கு தானும், மற்றவர்களும் யாரும் செல்லவில்லை என்றும், தங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டதாகவும் பாடகர் மாணிக்கவிநாயகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரியவந்துள்ளதாவது:

இலங்கை வவுனியாவில் புதிதாக அம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழாவில் இசைக் கச்சேரி நடத்த சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உள்ளிட்ட 25 பேர் இலங்கை செல்ல இருந்தனர்.

இதற்கு பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திருவான்மியூர் சாஸ்திரி நகரில் உள்ள மாணிக்க விநாயகம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர். பாடகர்கள் இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டார்கள்.

மாணிக்க விநாயகத்திடம் இலங்கை செல்ல வேண்டாம் என வற்புறுத்தி மனுவும் கொடுத்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
இதையடுத்து மாணிக்க விநாயகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ் உணர்வாளர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து 11-ந்தேதி (நாளை) இலங்கை வவுனியாவில் உள்ள கோவிலில் கும்பாபிஷேக விழாவினையொட்டி நடைபெற இருந்த இசை நிகழ்ச்சிக்கு நானும், மற்றவர்களும் யாரும் செல்லவில்லை என்பதையும், எங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டோம் என்பதையும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

0 Responses to இலங்கை இசை நிகழ்ச்சி! ரத்துச் செய்து விட்டதாக மாணிக்கவிநாயகம் அறிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com