Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சனிக்கிழமை கனடாவின் மொன்ட்ரியல் நகரில் இருந்து கிழக்கே 130 மைல் தொலைவில் கியூபெக் மாநிலத்தின் லக் மெகான்டிக் எனும் சிறு நகரத்துடன் 73 car train எனப்படும் கணிய எண்ணெய் நிரப்பப் பட்ட பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்த ரயில் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் கணிய எண்ணெய் நிரப்பப் பட்டிருந்த ரயில் பெட்டிகள் பிரிந்து மலைப்பகுதியில் இருந்து கீழே உருண்டு சென்று தடம் புரண்டு நகர மத்தியில் தீப் பற்றியதால் அப்பெட்டிகள் வெடித்துச் சிதறின. இதில் அருகிலுள்ள பல வீடுகளும் கட்டடங்ளும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்த விபத்தில் தீயில் கருகி இறந்த 5 பேரின் சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன. இந்நிலையில் திங்கட்கிழமை அதிகாரிகள் இன்னமும் 40 பேரைக் காணவில்லை எனவும் இதில் பலர் இறந்தும் ஏனையோர் காயங்களுடனும் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்து நேர்ந்த பின் பாதுகாப்புக்காக குறித்த நகரில் இருந்து 2000 பொதுமக்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர். இதேவேளை தீயணைப்புப் படையினரும் மீட்புப் படையினரும் இரவு பகலாக தீயை அணைப்பதிலும் காணாமற் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ் விபத்து நேர்ந்ததற்கான காரணம் இன்னமும் மர்மமாக உள்ள நிலையில் கனேடிய அதிபர் பாதிப்புக்கு உள்ளான பிரதேசத்துக்கு நேரடியாக விஜயம் சென்று பார்வையிட்டதுடன் குறித்த நகரை யுத்த வலயம் என ஒப்பிட்டுள்ளார். மேலும் இப்பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுமே இந்த அனர்த்தத்தில் பாதிக்கப் பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

கனேடிய ரயில் சேவைக்கு மிகப் பெரிய அவமானத்தைத் தரக் கூடியது எனக் கருதப் படும் இந்த விபத்து திட்டமிடப்பட்டு செய்யப் பட்ட சதிச் செயலா என்ற கோணத்தில் தற்போது விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

0 Responses to கனடாவில் வரலாற்றில் மிக மோசமான பாரிய ரயில் விபத்து:40 பேரை இன்னமும் காணவில்லை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com