ஞாயிற்றுக் கிழமை அமெரிக்காவின் சான் பிரான்ஸிக்கோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான போயிங் 777 விமானத்தின் விபத்து எதேச்சையாக நேரடியாகப் படம் பிடிக்கப் பட்டதுடன் CNN இணையத்தளத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளது.
300 பேருடன் தென்கொரியாவில் இருந்து புறப்பட்ட இவ்விமானம் சான்பிரான்ஸிக்கோவில் தரையிறங்குகையில் கடல் தடுப்பு சுவர்களுடன் மோதி சேதமடைந்தது. இதில் இருவர் கொல்லப் பட்டதுடன் 20 பேர் காயமடைந்திருந்தனர்.
Asiana Flight 214 எனும் இந்த விமானம் விபத்துக்குள்ளானதை Fred Hayes என்பவர் எதேச்சையாகப் படம் பிடிக்க நேர்ந்ததுடன் குறித்த வீடியோவை அவர் CNN இற்கு வழங்கியுமுள்ளார். விமானவியல் நிபுணர்களால் மிகவும் பிரயோசனம் மிக்கது என இந்த வீடியோ ஆதாரம் புகழப்படுகின்றது. இதில் தடுப்புச் சுவர்களுடன் விமானம் மோதிய போதும் அதன் மூக்குப் பகுதி எவ்வாறு மேல் நோக்கி இருந்தது என்பது தெளிவாக வெளிக்காட்டப் படுகின்றது.
Fred Hayes இந்த அனுபவம் பற்றிக் கூறுகையில், 'நான் எனது மனைவியுடன் சான் பிரான்ஸிக்கோ கடற்கரையில் நடந்து வந்து கொண்டிருந்தேன்! அப்போது சுமார் ஒரு மைல் தொலைவில் விமான ஓடுதளத்தில் விமானங்கள் தரையிறங்குவதை வீடியோவில் பதிவு செய்து கொண்டிருந்தேன். திடீரென போயிங் ஜெட் விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் நீர் மேற்பரப்பில் இருந்து பலத்த சத்தம் கேட்டது. சட்டென என்னால் என்ன நடைபெறுகின்றது என ஊகிக்க முடியவில்லை. விமானம் மறுபடியும் மேலே எழும்பப் போகின்றது என எதிர்பார்த்தேன். ஆனால் அது உரசிக் கொண்டே சென்று வெடித்தது.' என்றார்.
இதேவேளை இவ்விபத்தில் உடனடியாக மீட்கப் பட்டுக் காயமின்றித் தப்பித்த பலரும் மிகுந்த அதிர்ச்சியுடன் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதில் பலர் நான் உயிருடன் மீட்கப் படுவேன் எனக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று ஒரே மாதிரியான உணர்வுகளை வெளிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. என்னால் என்ன நடைபெறுகின்றது என நம்ப முடியவில்லை!' என்று தெரிவித்தார்.
0 Responses to நேரடியாகப் படம் பிடிக்கப் பட்ட சான் பிரான்ஸிக்கோ விமான விபத்து