வடமாகாண முதலமைச்சரை மாற்றம் செய்வதென்ற பேச்சிற்கே இடமில்லையென மறுதலித்துள்ளார் மஹிந்த.அவருடன் ஒத்துழைத்து செயற்படுமாறு பணிப்புரை விடுத்துள்ளதுடன் அவரை உடனயாக இடம்மாற்ற முடியாதெனவும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடமாகாசபையின் செயற்பாடுகள் தொடர்பினில் வடக்கு முதல்வர் மஹிந்தவை அண்மையினில் சந்தித்திருந்தார்.அப்போது முகத்திலடிப்பது போன்று கருத்துக்களை வெளியிட்ட மஹிந்த அவரிற்கான கௌரவத்தினையும் வழங்கியிருக்கவில்லையென கூறப்படுகின்றது.
அதேவேளை வடமாகாண சபைக்கு வெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதி உதவி பெற முடியாது என்றும் இலங்கை மத்திய வங்கியின் மூலமாகவே நிதியைப் பெறலாம் என்றும் மஹிந்த கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.
எனினும் கூட்டமைப்பு அங்கத்தவர் ஒருவருக்கு சொந்தமான ஊடகம் பேச்சுக்கள் வெற்றியென செய்தியினை வெளியிட்டுள்ளதாகவும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இது தொடர்பான தகவல்களை வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

0 Responses to வெறுங்கையுடன் திரும்பினார் விக்கி! மஹிந்த பொருட்படுத்தக்கூட இல்லையாம்!