அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய துணை தூதரக அதிகாரியாக பணியாற்றிவர் தேவயானி கோபரகேட் (39). இவர் வீட்டில் வேலை செய்த இந்திய பெண்ணுக்கு விசா பெற போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும், வேலைக்கார பெண்ணுக்கு குறைவான சம்பளம் கொடுத்து, துன்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அதன் அடிப்படையில் தேவயானியை கைவிலங்கு போட்டு அமெரிக்க போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்துக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால் இந்திய - அமெரிக்க உறவில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், தேவயானியை அமெரிக்க அதிகாரிகள் நிர்வாணப்படுத்தி சோதனையிடுவது போன்ற வீடியோ மீடியாக்களில் வெளியாகி உள்ளது. இதனால் அமெரிக்க அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மேரி ஹார்ப்பிடம் இதுதொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:
தேவயானி கைது செய்யப்பட்டபோது நடந்த ஆடை அவிழ்ப்பு சோதனை காட்சிகள் என்று காட்டப்படுகிற ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகள் நாங்கள் அறிந்தவரையில், தேவயானிக்கு உரியது அல்ல. இது அபாயகரமானது. ஆத்திரத்தை ஏற்படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டவை.
இந்தக் காட்சிகளின் நம்பகத்தன்மையை சோதித்துப் பார்க்காமல், சில செய்தி இணையதளங்கள் வெளியிட்டுள்ளன. இந்த வீடியோ நிச்சயமாக தேவயானிக்கு உரியவை அல்ல என்பதை நான் உறுதிபடக் கூறுகிறேன். இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பெண்ணை ஆண்கள் மத்தியில் ஆடையை அவிழ்த்து பரிசோதனை செய்ததற்காக வருத்தபடுகின்ற மனித சமுதாயம் , ஓராயிரம் பெண்களை ஆடையை அவிழ்த்து பாலியல் பலாத்காரம் செய்ததை வேடிக்கை பார்த்ததே தவிர வருத்தப்படவில்லையே ஏன் ?தேவயானியின் உடல் என்ன விசித்தரமானதா? அல்லது இலங்கை தமிழ் பெண்களின் உடல் என்ன கேவலமானதா?. அது சரி என்றால் இதுவும் சரியே .
BKZ WE ARE TAMILIANS.......THEY ARE INDIANS.... BY SRIRAM TAMIZHAN,CHENNAI..