Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் | 16.02.2014

பதிந்தவர்: ஈழப்பிரியா 16 February 2014

மேஷம்
நிதி நிலை உயர்ந்து நிம்மதி கிடைக்கும் நாள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் வந்து சேரும் வாய்ப்புண்டு. வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். தாய்வழி ஆதரவு பெருகும். மங்கலப் பொருட்களில் மனதைச் செலுத்துவீர்கள்.

மிதுனம்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். வெளியுலகத் தொடர்புகளை விரிவுபடுத்த முற்படுவீர்கள். புதிய ஆடை&ஆபரணச் சேர்க்கை உண்டு. சகோதர வழியில் ஒரு சுபகாரியச் செய்தி வந்து சேரும்.

கடகம்
விடியும் பொழுதே நல்ல தகவல் வந்து சேரும் நாள். விறுவிறுப்பாக ஓடி, ஆடி செயல்படுவீர்கள். விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் காண்பீர்கள்.

சிம்மம்
வரவு திருப்தி தரும் நாள். மனநிறைவான செய்திகள் வந்து சேரும். உற்றார், உறவினர்களின் வருகை உண்டு. தொழில், வியாபாரத்தில் புதிய நண்பர்களை சேர்ப்பது பற்றி சிந்திப்பீர்கள்.

கன்னி
பயணத்தால் பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். இடமாற்றம், ஊர் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள சேமிப்பில் சிறிது கரையலாம்.

துலாம்
போன்மூலம் பொன்னான செய்தி வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். அன்னியதேச பயண வாய்ப்புகள் எண்ணியபடியே கூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

விருச்சகம்
நல்ல தகவல் நாடிவரும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். தொழில் வளர்ச்சி கூடும். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம்.

தனுசு
குறை சொல்லியவர்கள் பாராட்டும் நாள். வெறுத்து ஒதுக்கியவர்கள் உங்களிடம் விரும்பி வந்து சேரும் வாய்ப்புண்டு. பெரியோர்களின் உதவியால் சில நன்மைகள் நடைபெறும். விரக்திகள் விலகும்.

மகரம்
ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் காண வேண்டிய நாள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. தேகநலனில் சிறிது அக்கறை தேவை. நினைத்தது நடக்க வேண்டுமென்று பிரார்த்திப்பீர்கள்.

கும்பம்
இன்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்திணையும். பொறுமையைக் கடைப்பிடித்து புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

மீனம்
மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்நாள். உள்ளன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை கண்டு கொள்வீர்கள். மனக்குழப்பங்கள் அகலும். செய்தொழிலில் மேன்மையும், உயர்வும் கிடைக்கும்.

0 Responses to இன்றைய ராசி பலன் | 16.02.2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com