Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசிய மீனவ ஒத்துழைப்புப்பேரவையின் அனுசரணையுடன் நேற்றுச் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்கு கலந்து கொள்ளுவதற்காக மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற மக்கள் திருப்பி அனுப்பப்பட்டமைக்கு கடும் கண்டனம் வெளியாகியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ பிரதிநிதிகள், காணாமல் போனவர்களின் பிரதிநிதிகள், பாதீக்கப்பட்ட மீனவர்கள் என சுமார் 110 பேர் இன்று சனிக்கிழமை காலை 6 மணியளவில் மன்னாரில் இருந்து இரண்டு தனியார் பேரூந்துகளில் யாழ்ப்பாணம் செல்ல விருந்த போதும் இன்று காலை புலனாய்வுத்துறையினர் குறித்த பஸ்ஸின் நடத்துனர், சாரதிகளுக்கு நேரடியாகவும், தொலைபேசியூடாகவும் அச்சுருத்தல்களை விடுத்திருந்தனர். இவர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டாம். அழைத்துச் சென்றால் என்ன நடக்கும் என்று தெரியாது என அச்சுறுத்தியுள்ளனர்.

எனினும் இவர்கள் தமது பயணத்தை தொடர்ந்த போது மன்னார்-சங்குப்பிட்டி பிரதான வீதி இலுப்பக்கடவையில்  உள்ள உணவகத்தில் காலை உணவை உட்கொள்ள இறங்கிய வேளை அவர்களை பின் தொடர்ந்து சென்ற புலனாய்வாலர்கள் பஸ் சாரதிக்கு மீண்டும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு யாழ்ப்பாணத்திற்கு மீறிச்சென்றால் பஸ் வண்டி எரிக்கப்படும். நீங்கள் சுடப்படுவீர்கள் என அச்சுறுத்தியுள்ளனர். இதனால் பயணத்தை தொடர பஸ் சாரதிகள் தயக்கம் காட்டியமையினால் பயணம் கைவிடப்பட்டது.

எனினும் தமது பயணம் தடைப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் சென்ற மக்கள் இடை நடுவே மீண்டும் மதியம் ஒரு மணியளவில் மன்னாருக்கு திரும்பியுள்ளனர்.

0 Responses to மன்னார் மக்கள் மிரட்டியே திருப்பப்பட்டனர்! அரசின் அடாவடி அம்பலம்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com