Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு எதிராக நான் கருத்து தெரிவித்தால் எனக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று நோர்வே தூதுவருடனான சந்திப்பின்  பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

தென்மராட்சியில் வடமாகாண முதலமைச்சர் ஆற்றிய உரைதொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி  விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளார் இது தொடர்பில் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்த போது அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக நான் அறிகின்றேன்.

இதுவரை எனக்கு எந்தவிதமான அறிவிப்புக்களும் விடுக்கப்படவில்லை நான் உரையாற்றும் போதே எழுதி முன்கூட்டி தயாரித்தே நான் உரையாற்றுவேன். சில விடயங்களை நான் எழுத்தில் இல்லாமல் பேசுவேன். குறித்த விடயம் தொடர்பில் நான் சட்டத்திற்கு முரணான வகையில் ஏதாவது கருத்துக்கள் முன்வைத்திருந்தால் என்மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

இதனை ஊடகங்களே பெரிய விடயமாகப் பார்ப்பதாக தெரிவித்த அவர் உண்மையினையே தான் பேசியதாகவும் தெரிவித்தார்.


0 Responses to நான் தயார்! மஹிந்தவிற்கு சீ.வி.விக்கினேஸ்வரன் சவால்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com