Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைக் கூட்டத்தொடர்பில் கலந்துகொள்ள சத்தம் சந்தடியின்றி நேற்றிரவு பயணமாகியுள்ளார்  அனந்தி சசிதரன்.

ஏற்கனவே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் மற்றும் சுரேஸ்பிறேமச்சந்திரன் ஆகியோர் அங்கு தரித்துள்ள நிலையில் அனந்தியும் அவர்களுடன் இணைந்து கொள்ள புறப்பட்டுள்ளார். அவர்கள் அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவு தேடும் பரப்புரைகளினில் ஈடுபடுவரென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே ஜெனீவாவிற்கு தான் பயணமாகமாட்டேன் என்று வடமாகாண வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற நோர்வே தூதுவருடனான சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஜெனீவாக் கூட்டத்தொடரில் வடக்கின் முதலமைச்சர் என்ற ரீதியில் கலந்துகொள்வீர்களா என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஐநா மனித உரிமைக்கூட்டத்தொடரில் கலந்துகொள்ள மாட்டேன் செல்வவேண்டிய அவசியமுமில்லை நான் வடக்கின் நிர்வாகம் சார்ந்த செயற்பாடுகளை கவனித்து வருகின்றேன். அரசியல் நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்த்து வருகின்றார்கள் அவர்கள் செல்வார்கள் பெண்கள் சார்பில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்துகொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

0 Responses to அதிரடியாக ஜெனீவாவினில் இறங்கினார் அனந்தி! தான் செல்லப்போவதில்லையென்கிறார் விக்கி!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com