Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் | 17.03.2014

பதிந்தவர்: தம்பியன் 17 March 2014

மேஷம்
மதி நுட்பத்தால் மகத்தான காரியம் செய்யும் நாள். வியாபார விரோதம் விலகும். ஆரோக்யம் சீராக ஒருசிறு தொகையைச் செலவிடுவீர்கள். குடும்பத்தாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

ரிஷபம்
வியாபார விருத்தி ஏற்படும் நாள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். தொழில் வளர்ச்சி கூடும். எதிரிகள் விலகுவர்.

மிதுனம்
கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். பிரியமானவர்களைத் தேடிச் சென்று சந்திப்பீர்கள். வாகனத்தைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். அத்யாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்
சுறுசுறுப்பாகச் செயல்படும் நாள். கூட்டு முயற்சிகளிலிருந்த தடை அகலும். உடன் பிறந்தவர்கள் உங்கள் கருத்துக்களுக்கு ஒத்து வருவர். தொழிலில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும்.

சிம்மம்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளும் எண்ணம் உருவாகும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

கன்னி
தெய்வீகச் சிந்தனை மேலோங்கும் நாள். திட்டமிட்ட காரியத்தை மாற்றியமைப்பீர்கள். எப்படி நடக்குமோ என நினைத்த காரியம் நல்லவிதமாக நடைபெறும். உடல் நலத்தில் கவனம் தேவை.

துலாம்
பக்கபலமாக இருப்பவர்களிடம் பக்குவமாகப் பேச வேண்டிய நாள். உற்றார், உறவினர்களுக்கு பணம் கொடுத்து உதவும் சூழ்நிலை உருவாகும். அலைச்சல் சற்று அதிகரிக்கலாம்.

விருச்சகம்
தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டாளிகளால் லாபம் கிட்டும்.

தனுசு
நினைத்த காரியம் நிறைவேறும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். வீடு கட்டும் பணிக்கு அஸ்திவாரமிடுவீர்கள். பணவரவு போதுமானதாக இருக்கும்.

மகரம்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பூர்வீக சொத்துக்கள் விற்பனையால் வரவேண்டிய தொகை கைக்கு கிடைக்கலாம். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும்.

கும்பம்
காரிய வெற்றிக்கு கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். குறைவாக பேசினாலும் குறை கூறிப்பேசாமலிருப்பது நல்லது. வரவைக் காட்டிலும் செலவு கூடும். ஆரோக்யத்தில் கவனம் தேவை.

மீனம்
நன்மைகள் நடைபெறும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர்.

0 Responses to இன்றைய ராசி பலன் | 17.03.2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com