Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் | 18.03.2014

பதிந்தவர்: தம்பியன் 18 March 2014

மேஷம்
உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். ஏட்டிக்கு போட்டியாக செயல்பட்ட தொழில் பங்குதாரர்கள் இனி ஒத்து வருவர். இடமாற்றம், வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

ரிஷபம்
பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி வந்து சேரும் நாள். தொகை கேட்ட இடத்திலிருந்து கிடைக்கும். ஆலய வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சொந்த பந்தங்களின் சந்திப்பால் மனநிறைவு கூடும்.

மிதுனம்
இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் நாள். இடம், பூமியால் லாபம் கிடைக்கும். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகி மனநிம்மதியைக் கொடுக்கும். வாகன யோகம் கிட்டும். உத்தியோக அனுகூலம் உண்டு.

கடகம்
விருந்தினரை வரவேற்று வியப்படையும் நாள். உடன் பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் செய்தியன்று வந்து சேரும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும், பணிபுரிவீர்கள். வழக்குகளில் வெற்றி கிட்டும்.

சிம்மம்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பகல் இரவாக பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி
சுபவிரயங்கள் ஏற்படும் நாள். விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. நண்பர்களால் அன்புத் தொல்லைகள் ஏற்படலாம். நேற்று செய்யாமல் விட்ட வேலை ஒன்றை இன்று சேர்த்து செய்யும் சூழ்நிலை உருவாகும்.

துலாம்
வெளிவட்டார பழக்கம் விரிவடையும் நாள். வீட்டு தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிரியமானவர்களுடன் உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு.

விருச்சகம்
வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு ஆச்சர்யப்பட வைக்கும். மாலை நேரத்தில் வரும் தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சி தரும்.

தனுசு
எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவ முன்வருவர். வருமானம் திருப்தி தரும்.

மகரம்
புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும் நாள். பேச்சில் இனிமை கூடும். கணவன், மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சோர்வு, சோம்பல் நீங்கி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.

கும்பம்
வழிபாட்டின் மூலம் வளர்ச்சி காண வேண்டிய நாள். ஒரு வகையில் சிக்கனமாக இருந்தாலும், மற்றொரு வழியில் செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் சூழ்நிலை அமையும்.

மீனம்
நண்பர்களால் நல்ல தகவல் வந்து சேரும் நாள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உற்றார், உறவினர்கள் கேட்ட உதவிகளைச் செய்து அவர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

0 Responses to இன்றைய ராசி பலன் | 18.03.2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com