Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வலி. வடக்கு மக்களின் மீள்குயேற்றம் தொடர்பில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக தங்களை ஏமாற்றும் வகையிலையே இருப்பதாகவும் இவ்வாறு இராணுவத்தினரின் ஏமாற்று வேலைக்கு நாம் ஒருபோதும் பலியாக தாம் தயாரில்லையென்றும் மீள்குடியேற்றக்குழு அறிவித்துள்ளது. இராணுவத்தினரின் தொடர் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து, அடுத்த கட்ட போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

வலி. வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில், வலி. வடக்கு மீள்குடியேற்ற குழுவிற்கும் வலி. வடக்கு மக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் வலி. வடக்கு பிரதேச சபையில் நேற்று நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வலி. வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் மீள்குடியேற்ற குழுவிற்கும் இராணுவத்தினருக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அத்தனையும் ஏமாற்றும் வகையிலையே அமைகின்றது. ஆகவே, அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராய வேண்டியிருக்கின்றது. இந்நிலையில், இந்த மாதம் நடைபெறவுள்ள அடுத்த பேச்சுவார்த்தையின் போது காலத்தை இழுத்தடிக்காமல், தொடர்ந்தும் ஏமாறாத வகையிலும் இறுதி முடிவெடுக்கப்படும்.

அத்தோடு, இந்த முடிவிற்கமைய தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதென்றும், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் ஏகோபித்த முடிவிற்கமைய தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

0 Responses to போராட்டங்களில் குதிக்கப்போவதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற அமைப்பு அறிவிப்பு!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com