ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்துள்ள இரண்டாவது தீர்மானத்தில் பெரும் அழுத்தங்களை வழங்கும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவினால் நேற்று முன்தினம் முன்வைக்கப்பட்ட இரண்டாவது தீர்மானத்தில், சர்வதேச விசாரணையொன்றுக்கான அழைப்பை விடுக்கும் சொற்பிரயோகங்கள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த யோசனைகள் சிலவும் உள்வாங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இறுதித் தீர்மானம் இன்னமும் வலுவடைவதற்காக சாத்தியங்கள் காணப்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டின் பிரதிபலிப்பாகவே இதனைக் கொள்ள முடியும். இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் குறிப்பிட்டளவு ஆக்கபூர்வமாக அமையும் என்று இன்னமும் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தில் அழுத்தங்களை அதிகரிக்கும் மாற்றங்கள்: எம்.ஏ.சுமந்திரன்