Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிளிநொச்சி தர்மபுரத்தில் வைத்து இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய சிறுவர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சிறுமி விபூசிகா பாலேந்திரனை (வயது 13) தொடர்ந்தும் அங்கேயே வைத்திருப்பதற்கான உத்தரவினை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை விடுத்துள்ளது.

அத்தோடு, சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரது உடமைகளை எடுத்து வருவதற்கும் பொலிஸாருக்கும், மாவட்ட நன்னடத்தை அதிகாரிகளுக்கும் நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு அடைக்கலம் அளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இராணுவத்தினரால் அண்மையில் சிறுமி விபூசிகாவும், அவரது தாயார் ஜெயக்குமாரி பாலேந்திரனும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய விபூசிகா, கிளிநொச்சி மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார். ஜெயக்குமாரி பாலேந்திரன் பூஸா தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

0 Responses to சிறுமி விபூசிகாவை தொடர்ந்தும் சிறுவர் இல்லத்தில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com