கனடாவில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் தமிழக நடிகை திரிஷா கலந்த கொண்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈழத் தமிழர்களின் படுகொலை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கண்டிக்கும் விதமாக, இலங்கைக்கு தமிழக நடிகர் நடிகைகள் போவதில்லை என ஏற்கனவே முடிவு எடுத்துள்ளனர்.
அத்துடன் இலங்கையில் நடக்கும் இசை விழாக்களிலும் கலந்து கொள்ளாது பின்னணி பாடகர்கள் புறக்கணித்து வருகின்றனர்.
அதேபோலவே வெளிநாடுகளிலும் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் நடத்தும் விழாக்களை தமிழ் திரையுலகினர் புறக்கணித்து வருகின்றனர்.
இதனை மீறி செல்வோருக்கு எதிராக கடும் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழக நடிகை திரிஷா தடையை மீறி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் கனடாவில் நடத்திய விழாவில் பங்கேற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவில் நடைபெற்ற இந்த விழாவை அங்குள்ள தமிழர் அமைப்பு ஒன்று நடத்தி உள்ளது.
இந்த அமைப்பில் இருப்பவர்கள் ராஜபக்ஷக்கு அரசின் கூட்டணியில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் என ஏனைய தமிழர் அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இந்த விழாவில் திரிஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டமை தொடர்பில் தமிழ் அமைப்புகள் கண்டனங்களை வெளியிட்டுள்ளதாக இந்திய தமிழ் இணையத்தளமொன்று (maalaimalar.com) செய்தி வெளியிட்டுள்ளது.











0 Responses to கனடாவில் ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் நடிகை திரிஷா பங்கேற்பு? (படங்கள் இணைப்பு)