நேற்று இந்தியாவின் வட மாநிலங்களில் தசரா கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. பீகாரில் நடைப்பெற்ற இந்தக் கொண்டாட்டத்தில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
நேற்று பீஹார் மாநிலத்தின் பாட்னா நகரில் உள்ள காந்தி மைதானத்தில் தசரா பண்டிகையின் கடைசி தினமான ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மைதானத்தில் குவிந்திருந்தனர். அப்போது மின்கசிவு என்றும், எப்போது விபத்து நேரிடலாம் என்றும் வதந்தி பரவியுள்ளது. இதயைடுத்து மக்கள் நுழைவு வாயிலை நோக்கி ஒடத்துவங்கியுள்ளனர். இதனால், அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டு, மக்கள் முண்டியடித்துக்கொண்டு, ஒருவர் மேல் ஒருவர் விழுந்தபடி ஓடியதோடு மட்டுமின்றி, கீழே விழுந்து கிடந்தவர்கள் மீதும் ஏறி ஓடியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 33 பேர் என்றும், பலர் காயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்றும் தெரிய வருகிறது.
சம்பவத்தை கேள்வியுற்ற பிரதமர் நரேந்திர மோடி மிகவும் அதிர்ச்சி அடைந்து வருத்தம் தெரிவித்துள்ளார். அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயை மத்திய அரசு வழங்கும் என்றும் அறிவித்துள்ளார். அம்மாநில முதல்வர் ஜித்தன் ராம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார், இருப்பினும் இதுத் தொடர்பான விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 Responses to பீஹார் தசரா கொண்டாட்டத்தில் பலர் பலி:பிரதமர் வருத்தம்