Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சப்ரகமுவ பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும், மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக பல்கலைக்கழகத்தை காலவரையின்றி மூடிவிடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

ஆனால், நிர்வாகத்தின் முடிவையும் பொருட்படுத்தாமல் பல்கலைக்கழக கட்டடங்களுக்குள்ளேயே தங்கியிருப்பதற்கு மாணவர்கள் தீர்மானித்துள்ளனர்.

முன்னதாக, மாணவிகளுக்கான இரண்டு தங்கும் விடுதிகளை திறந்துவைப்பதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை அங்கு வந்த உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். பொலிஸார் தண்ணீர் பிரயோகம் செய்து மாணவர்களை கலைத்த பின்னர், உயர்கல்வி அமைச்சர் மாணவிகளின் விடுதிகளை திறந்துவைத்துள்ளார்.

இன்னும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விடுதிகளை பல்கலைக்கழக நிர்வாகம் திறந்துவைத்துள்ளதாக மாணவர் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த விடுதிகளில் தங்க மறுக்கின்ற மாணவிகள் நிர்வாகத்தையும் மீறி, ஆண்களின் விடுதிகளில் தங்க, ஆண் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் தங்குவதாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் தேவராசா தினேஸ் பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், சகல வசதிகளுடனும் மாணவிகளுக்கான புதிய தங்கும் விடுதிகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார். அத்தோடு, மாணவர்களின் போராட்டங்களின் பின்னணியில் அரசியற்கட்சி ஒன்று இயங்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். எனினும், தமது போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூசுவதை மாணவர்கள் எதிர்த்துள்ளனர்.

0 Responses to மாணவர்களின் போராட்டங்களை அடுத்து சப்ரகமுவ பல்கலைக்கழகம் மூடப்பட்டது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com